பட்டாம்பூச்சி - வாசிப்பு அனுபவம்

மாபெரும் மானிட சாசனம் இருண்ட உலகத்தில் அந்தப் ஃபிரெஞ்சுக் காரனுக்கு இடப்பட்ட பெயர்: பட்டாம்பூச்சி. (இயற்பெயர் ஹென்றி ஷாரியர்) 1931-ஆம் ஆண்டு, கொலையொன்றைச் செய்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் முழுவதும் தீவாந்தரச் சிறையில் கழிக்க வேண்டும். என்று தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யவில்லை என்பது அவன் கட்சி. பதின்மூன்றாண்டுக் காலத்துக்கு, சிறை சிறையாக அவன் தப்பிக் கொண்டேயிருந்தான். ஓட்டைப் படகுகளிலும், கட்டுமரங்களிலும், புதை மணல் களிலும், இருண்ட அடவிகளிலும், சிவப்பு இந்தியர்களிடமும், தன்னைவிட முரடர்களான கைதிகளிடமும் அவன் திரும்பத் திரும்பத் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்துப் போராடினான். மீண்டும் மீண்டும் அவனைச் சிறை பிடித்தார்கள். இறுதியில் பிரமிக்கத்தக்க ஒரு கடைசி முயற்சி செய்து வெற்றியும் பெற்றான். அறுபத்தாறு வயதான போது பட்டாம்பூச்சி அந்தப் பழைய நாட்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் இது. ஒரு ‘கொலைகாரன்' எழுதிய புத்தகமானாலும், மனிதனின் தணிக்க முடியாத சுதந்திர உணர்வையும், துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மனத் திண்மையை யும் தைரியத்தையும் எடுத்துக்காட்டுகின்ற மாபெரும் மானிட சாசனம் . ...