உருமாற்றம் - நாவல் வாசிப்பு அனுபவம்
.jpg)
நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃபிரான்ஸ் காஃப்கா , ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் , சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் . மனிதச் சீரழிவையும் , வாழ்வின் கொடூரங்களையும் , அவரது பாணியில் எழுத்தாக மாற்றி பல உன்னத படைப்புகளை இவ்வுலகத்திற்கு தந்தவர் . இவரது எழுத்தின் பாதிப்பு கொண்ட எழுத்தாளர்கள் இன்றும் உள்ளனர் . இவரது படைப்புகளை சாதாரணமாக வாசிக்க இயலாது . வாழ்வின் சிக்கல்களை , பல்வேறு பட்ட மனித உளகிளர்ச்சிகளை ,மிக ஆழமான நுட்பத்துடன் கதைப்படுத்தி இருப்பார் . - உருமாற்றம் - சீனாவின் நெடுஞ்சுவர் - ஒரு நாயின் ஆராய்ச்சி - வளை - தண்டனைக் குடியிருப்பில் - இராட்சத மூஞ்சுறு என்ற 6 சிறுகதை தொகுப்பே இந்த புத்தகம் . 07-12-2022 - ல் வாசிக்க ஆரம்பித்து 27-12-2022 - ல் நிறைவு பெற்றது. 240 பக்கம் வ...