Posts

Showing posts from September, 2024

30-09-2024

        இன்று வியாபாரம் பரவாயில்லை,காலையில் கிளம்பும் போதே கொஞ்சம் துடிப்போடு கிளம்பினேன்.          தொழிலில் சில செயல்களை நினைத்தால் மிகவும் கோபம் வருகிறது.         இருசக்கர வாகனம் இரண்டும் பழுது அடைந்து விட்டது. கொஞ்சம் வருத்தமாக உள்ளது.         கடையில் இருந்தேன் அப்பா வெளியில் சென்றார். இந்த மாதத்தில் நிறைய மரணங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.        பிணாயில் இறக்க சென்று வந்தேன் பிரிமியர் மில் க்கு. ஒரு பச்சி வடை சாப்பிட்டேன்.       பெரியப்பா விற்கு பிசியோ தெறப்பி செய்தார்கள், கவனித்தேன், குளிக்க வைக்க உதவி செய்தேன்.             சரக்குகளை ஒதுக்கி வைத்தேன். இன்னும் எடுத்து வைக்கவில்லை.           இன்னும் தெளிவாக இருக்க வேண்டும்.       

29-09-2024

               இன்று இருசக்கர வாகனத்தையும், சமையல் அடுப்பையும் காலையிலேயே சரி செய்தேன்,.. நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கை இவை.            பெரியப்பாவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றேன்.            தியான்  அங்கு கீழே விழுந்து முட்டியில் அடிப்பட்டது கொஞ்சம் பயந்துவிட்டோம்.           இன்று " வாஸ்கோடகாமா " என்ற படம் பார்த்து நேரத்தை வீணாக செலவிட்டதை நினைத்து வருந்துகிறேன்          இனி பார்க்கலாம் .  நினைத்ததை செய்ய மேலும் நிறைய நினைக்க வேண்டும்.

28-09-2024

Image
                   ஒரு கிளை வெட்டப்பட்ட வெப்பமரம் அதன் மேல் பகுதியை அதன் காலடியில் இருந்து காண இயலாது ஏன் எனில் மரத்தின் 10 அடி உயரத்தில் தொழுவம் அமைக்க பட்டு ஒரு டீ கடையும் உண்டு, அந்த தேநீர் கடைக்கு 3 வருடங்களாக சென்று வருகிறேன் வியாபாரம் பார்க்க,.         முதல் முறை நான் அதை காணும் போது ஒரு கை வெட்டப்பட்ட மனிதன் போல தோன்றியது. மரத்தின் கிளை வெட்டபட்ட பகுதி நீண்ட வருடங்கள் அதை மூடுவதற்காக ஒரு வகை பிசினை உருவாக்கும், நமக்கு புண்களில் பக்கு ஏற்படுவதை போல. நான் அந்த மரத்தை பார்க்கும் போதெல்லாம் தடவி கொடுப்பேன், தொடுகையில் ஆறுதலையும் அன்பையும் கடத்துவேன். அதன் கட்டி இரத்தம் ஆகிய பிசினை என் விரலில் தடவி பார்ப்பேன், என் தோல் மீது இன்னொரு தோல் வளர்ந்தது போல் இருக்கும்.அதை பயன் படுத்தி வளையம் போட்டால் விரல் க்கு எளிதாக இருக்கும். இன்று வியாபாரதிற்கு சென்ற போது அந்த வெப்ப மரம் முழுமையாக வெட்ட பட்டு இருந்தது, மனம் கனத்தது.     இடுப்புக்கு மேலே உடல் இல்லாத மனிதன் போலே இருந்தது அந்த இடம், வெக்கை அதிகமாக இருந்தது....

27-09-2024

                   காலையில் கைபேசி என்னை எழுப்ப தவறிவிட்டது, என அதன் மீது பழி சுமத்தி 5.50 க்கு எழுந்தேன்.                  கடையில் சில வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது மிக கடினமான ஒன்று மனதளவில்.                    இன்று ஒரு கடையில் தெரியாமல் ஒரு பொருளுக்கு அதிகத்தொகை வாங்கிவிட்டேன். அடுத்த முறை அந்த கடையில் என்ன ஆகுமோ என  பயம்.             மழை நன்றாக பெய்தது, மழையில் நனைந்து கொண்டே நீலனுக்கு ஊசி போட சென்றோம் நானும் அம்மாவும்.           இன்று ஒரு வியாபாரி அதிகமுறை கைபேசியில் அழைத்தார் பணத்துக்காக.              நாளை முதல் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.                 

26-09-2024

                         ஒரு கடைக்காரர் சொன்னார் 'ஆஸ்பத்திரி செலவும் போலீஸ் கேஸ் செலவும் வரவே கூடாது வந்தால் அவ்வளவு தான்' ன்னு,.                            பெரியப்பா வை இப்படி பார்ப்பது மனம் சங்கட்டமாக இருக்கிறது.          சுகர் பிரசர் க்கு அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர் ல் ஒரு சித்தமருத்துவரை பார்க்க சென்றார்.        உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது, உடலை நேசிக்க வேண்டும் முதலில்.              நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அப்பா வுடன் இருசக்கர வாகனத்தில் சென்றேன். கொஞ்சம் பேசினோம் .          அனு வை பள்ளியில் இருந்து வீட்டிற்கு கூட்டிவந்தேன்.       நீலனுக்கு காய்ச்சல், கொஞ்சம் சோர்வாக இருக்கிறான்.          கணேஷ் மாமாவிற்கு பௌத்ரம் வலி அதிகமாக உள்ளது.

25-09-2024

Image
                                 எதிர்பாராத சிரமங்களும் துன்பங்களும் நம்மை செதுக்கும், நாம் எவ்வளவு நிதானமானவர்கள் என்பதை நமக்கே காட்டும்.               இயக்குனர் பிரேம் அவர்களின் ஒரு நேர்காணல் கண்டேன், சினிமா சார்ந்த சில நுட்பங்களை கற்றுக்கொண்டேன்.                 இன்று கடையில் ஒரு பெண்மணிக்கு 5 ரூபாய் அதிகமாக வாங்கியதிற்கு அந்த பெண் கூறிய வார்த்தைகள் என்னை வேதனை படுத்தியது, ' படித்தும் அறிவு இல்லை, கணக்கு பார்க்க தெரியவில்லை ' என வைதுக்கொண்டே தெருவில் நடந்து சென்றது.            இன்று முழுவதும் கடையில் இருந்தேன், இன்று மூன்று மரணங்கள். அதில் ஒன்று என்னை வியக்க வைத்தது, மரணதை ஏற்றுக்கொண்ட மனிதர்.           பெரியப்பா விற்கு உடல்நிலை சரிஇல்லாதது மிக வருத்தமாக உள்ளது.

24-09-2024

Image
         நேற்று எழுதிக்கொண்டு இருக்கும் பொழுதே ஒரு சம்பவம் ஏற்பட்டது, திடீரென பெரியப்பாவிற்கு இடது கை கால் வேலை செய்யவில்லை, அப்பா அங்கு சென்று விட்டார். நேற்று இரண்டு படங்கள் பார்த்தேன், ஒன்று 'வாழ' இது என்னை அதிகமாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது, அதிகமாக சிரித்தேன்.   இன்னொன்று ' அன்னையும் ரஸூலும் ' ஆண்ட்ரியா வும் பகத் பாசில் உம். ' சேது ' படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தியது, மிக அழுத்தமான படம், அனைவரது நடிப்பும் உண்மையாக இருந்தது. நான் இப்போது கிருஷ்ணா மருத்துவமனையில் உள்ளேன். இரவு உறக்கம் இங்கு தான்.

23-09-2024

Image
           'மெய்யழகன்' படம் பார்க்க ஆவலாக உள்ளேன். இன்று வியாபாரம் அமைதியாக சென்றது.              ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன். 'சபரீஸ்குமார்' என்பவரின் கட்டுரை என்னை மிகவும் பொறாமை கொள்ள வைத்தது, நாமும் இதே போல் எழுத வேண்டும் என்று.  எனக்கு பல நேரங்களில் தோன்றுவதுண்டு சில நல்ல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வாசிக்கும் போது, நாம் ஏன் எழுத வேண்டும் இவ்வளவு சிறப்பாக இத்துணை நபர்கள் எழுதும் போது.     எழுத்தாளர் "எஸ். ரா " ஒன்று சொன்னார் ' என்னைவிட சிறப்பாக எழுதவும் கொஞ்சம் குறைவாக எழுதவும் ஆட்கள் இருக்கலாம் நிறைய, ஆனால் என்னை போல் எழுத நான் மட்டுமே இருக்கிறேன்' என, அந்த வரிதான் என்னையும் எழுத வைக்கிறது.         தினமும் ஒருமணி நேரம் எழுத ஆசைப்படுகிறேன் ஆனால் சரியான சூழல் அமைக்க வேண்டும் நான் .       சபரி, விசாக், இருவரிடமும் பேசினேன், மனம் மகிழ்ச்சியாக இருந்தது.          இருவரும் வெளிநாட்டில் உள்ளனர், அக்டோபர் மாதம் வருகின்றனர்.   ...

22-09-2024

Image
         இன்று விடுமுறை நாள், காலையில் எழ தாமதம்,. சரக்குகளை ஒதுக்கி வைத்தேன்.            காலையிலேயே வாசிப்பை தொடர்ந்தேன். 'நலமறிதல் ' புத்தகத்தை நிறைவு செய்தேன்.               பல அறிய தகவல்களை இந்த புத்தகத்தில் அறிந்து கொண்டேன்,.                மருத்துவம் சார்ந்து பல தெளிவுகள் கிடைத்தது, அதிர்ச்சியும் கிடைத்தது.                   குபேரனுக்கு உடல்நிலை சரியில்லை ஊசி போட போனோம், கொஞ்சம் பேசினோம்.              ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன்.                ' அன்னையும் ரஸூலும் ' என்ற மலையாள படம் பார்க்க ஆரம்பித்தேன்.                 என் வாழ்க்கையில் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது அதை தெளிவு செய்ய வேண்டும் சீக்கிரம்.                   ' நலமறிதல் ' புத...

21-09-2024

Image
             மன வலிமை உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். மனம் ஏனோ நிகர் நிலையில் இல்லாமல் மயக்கநிலையில் மிதக்கிறது.              உடலை என் வசப்படுத்த வேண்டும். வேட்டை பெருமாள் கோவில் சென்று வந்தோம்.          'தங்கலான் ' படம் பார்த்தேன், நன்றாக இருந்தது கதை. விக்ரம் அவர்களின் நடிப்பு மிக கட்சிதமாக இருந்தது, புதுமையாக.     இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நன்றாக திரைக்கதையும் இயக்கமும் இருந்திருக்கலாம்.       இசையும் படத்திற்கு ஏற்றார்போல் ஒட்டவில்லை.       ஆழ்ந்த தாக்கத்தையும் பாதிப்பையும் தரவில்லை எனக்கு.        'ஆயிரத்தில் ஒருவன் ' திரைப்படம் உருவாக்கிய எல்லையை தொடுவது இயலாத காரியம்,.. செல்வராகவனால் கூட இயலாது.           தங்கலான் குழுவிற்கு நன்றி, இப்படி ஒரு முயற்சி எடுத்து ஒரு படைப்பை தந்ததிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.     'அப்போகழிட்ப்டோ ' மாதிரி எதிர்பார்த்தது என் தவறு.       ...

20-09-2024

Image
     நேற்று மதுரையில் நடந்த நிகழ்வுகள் வாழ்வு முழுவதும் நினைவில் நீங்காதவை, இறுதியில் நிம்மதி அளிக்க கூடியதாக நிறைவு பெற்றது.           மனம் களிப்பில் திலைத்தது, கண்களில் நீர் ததும்ப அனைவருக்கும் தெரிவித்தேன் கைபேசியில், 'நீலனுக்கு ஒன்னுமே இல்ல எல்லாம் normal னு டாக்டர் சொல்லிட்டாரு ' னு.         அனைவரது குரலிலும் நிம்மதி கலந்த உணர்வோடு வார்த்தைகள் மெதுவாக வருவதை ரசித்தேன், அவர்களது கண்களிலும் நீர் கோர்த்திருக்கும்.            நீலனுக்கு கிட்னியில் ஒரு பிரச்சனையும் இருக்காது னு ஆழ்மனம் நம்பினாலும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகிவிட்ட பின்பே மனம் அமைதி அடைந்தது,. நன்றி திரு கோபாலன் மருத்துவர். நன்றி கணேஷ் மாமா.      அவன் பிறந்த போது அடைந்த சந்தோஷம் மீண்டும் கண்டேன்.     அவன் மகிழ்வானவன்,.. என் மகன். அவன் அவனாக இருக்க வேண்டும், என்னை போல் என் தந்தைஐ போல் ஒரு சுயம்புவாக தன் சிந்தனையில் இருந்து.         

18-09-2024

Image
      ஜெயமோகனின் 'நலமறிதல்' புத்தகம் வாசித்து வருகிறேன் சில நாட்களாக அதில் மருத்துவம் பற்றிய வியப்பூட்டும் தகவல்களை அறிந்தேன்.       பொன் நீலன் - க்கு கிட்னி யில் உருவ வேறுபாடு உள்ளது அது அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் இயல்பான ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.        நாளை ' மீனாட்சி மெஷின் ' மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க செல்கிறோம்,.       அது கொஞ்சம் மனதை வாட்டுகிறது,.. நாளை நல்ல நாளாக அமைய மீனாட்சி அம்மனை வேண்டுகிறேன்.

17-09-2024

Image
            மரங்களின் அசைவை கவனித்தேன், சில இலைகள் மென்மையாக இசைக்கின்றன. சில இலைகள் ஏதோ தகவல்களை பரிமாறி கொள்கின்றன.                அவை என்னதான் செய்கின்றன? பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அதன் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?               மனிதர்களை போலே உறவுகளும் உணர்வுகளும் கொண்டு அன்பின் வெளிச்சத்தை ருசிக்கின்றனவா ?               கிளை அசைவதால் காற்று உண்டாகிறதா இல்லை காற்றினால் கிளை அசைகின்றதா?                  மரமே நீ பேசும் மொழியை எனக்கும் கற்று தருவாயா,? உன்னைப்பற்றி காவியம் படைக்கத்தான் கேட்கிறேன்.         ' ஏ மரமே ' என ஒருபோதும் எந்த மனிதனையும் திட்ட மாட்டேன் இனி நீ இந்த உலகின் மூத்த குடி அல்லவா ?       என் வீட்டின் வாசலில் உள்ள கதவிடம் கேட்க்கிறேன் இதற்காகவா நீ பிறந்தாய், உன் மீதி உறுப்புகள் எங்கே இருக்கும் தெரியுமா ?      நிறைய எழுத தோன்ற...

16-09-2024

Image
        பிடிவாத குணத்தை ஒருபோதும் தவற விடக்கூடாது. சில கொள்கைகளையோ நமக்கு பிடிக்காத விடயங்களை பிறருக்காக தளர்த்தக் கூடாது.       கண்டிப்புத் தன்மையும் நேர்மையான நிமிர்வும் நம்மை நீண்ட நாட்கள் நிறைவாக வைத்திருக்கும்.        இன்று ஒரு நபரை தவிர்த்தேன் வேண்டும் என்றே, கொஞ்சம் நெருடலாக இருந்தது, இருந்தும் பரவா இல்லை, நான் செய்தது சரியே,.      ஆபத்தில் உதவாத நபர்களை கூட மன்னித்து விடலாம்,.. ஆபத்து நீங்கிய பின்பும் கண்டுகொள்ளாத நபர்களை நாமும் அப்படியே விடுவதே சால சிறந்தது.       நான் உதவி கேட்பதே மிக அறிது, அந்த உதவியை செய்ய தகுதி உள்ளவரே நிராகரித்தால், அந்த நபர் மீது ஏற்படும் எண்ணம் ?.       குறுகிய மனப்பாங்கு கொண்ட மனிதர்களை விட்டு தூர விலகுவது உத்தமமான செயல். என் மனதுக்கு பிடித்தவாரு புகைப்படம் நிறைய எடுப்பேன், சில காலமாக ஒன்றுமே அமையவில்லை, காரணம் என் கை பேசியின் பழுது நீக்கத்தில் உள்ள குறைபாடு. இன்று சில புகைப்படங்கள் நன்றாக அமைந்தது.               ...

14-09-2024

Image
                        ஒவ்வொரு புதிய செய்கையும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பதை மனதார உணர்ந்தேன் . கனிவான பேச்சும் சாந்தமான பார்வையும் எளியமனிதர்களை இனிமையாக ஏற்றுக்கொள்ள வைக்கும் .                        வெயில் விருப்பமான ஒன்று எனக்கு , அனால் சில காலமாக என் கண்களால் அதை எதிர்கொள்ள இயலவில்லை , காரணம் மின்திரைகளாக இருக்கலாம் .                          இன்று 'GOAT' படத்திற்கு சென்றேன் , வெங்கட்பிரபு வின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது . நடிகர் விஜய் சினிமாவை விட்டு செல்ல போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இவ்வளவு கூட்டம் இனி எந்த நடிகருக்கு வாய்க்கப்போகிறதோ .                                மாற்றுத்திறனாளிகள் , வயது முதிர்வு அடைந்தவர்கள் , குழந்தைகள் , பெண்கள் , என அனைத்து வகை மக்களையும் ஈர்க்கும் திறன் என்ன...

13-09-2024

Image
  இன்று காலையில் வியாபாரதிற்கு கிளம்பும் போது வாகனக் கோளாறல் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது.     வெயில் அதிகமாக இருந்தது, கண்கள் எரிகிறது.      இன்று இயக்குனர் 'டெராண்டினோ ' வின் " PULP FICTION " படம் பார்த்தேன் சிறப்பாக இருந்தது.   1992 -ல் எடுத்தது போல் இல்லை,.. மிகத்துல்லியமாக இருந்தது. டெராண்டினோ படம் என்று தெரியாமலேயே சில படங்கள் சிறு வயதில் பார்த்துள்ளேன்,.. ' Once upon a time in Hollywood ', Diango,    இவரின் படங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமானவவை, ஏன் எனில் நான் வன்முறை மிக்கவன் என என் அருகில் இருப்பவர்களுக்கு தெரியும். வன்முறையை ரசிக்கும் கலையாக, அழகியல் நோக்கொடு எடுக்கும் நுட்பத்தை இவரின் படங்கள் பார்த்து கற்றுக்கொள்ளலாம். இவரின் தாக்கம் என் அனைத்து படங்களிலும் இருக்கும். என்னிடம் என் வீட்டிலும் சில நண்பர்களும் அடிக்கடி கூறும் வரி ' இரத்தம் இல்லாமல் மரணம் இல்லாமல் படம் எடு ' என்பதுதான். Tarantino ஒரு குரு எனக்கு. இரவு ' PULP FICTION ' தாக்கத்திலேயே 2 KM நடந்து சென்று வாகனத்தை பழுது பார்த்து வாங்கி வந்தேன்.

விபத்துக்கள்

Image
                    " ROAD " என நான் ஒரு குறும்படத்தை கல்லூரியில் இயக்கினேன். அதை இயக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தேன். வழக்கம் போல என் நண்பர்களையே நடிக்க வைத்துஇருந்தேன். https://youtu.be/C5J1mB-QXGU?si=YrDp0LkAu9N0OFlZ சபரி, சங்கிலி, சுந்தர், துரைபாண்டி, என் நண்பர்கள் என்பதாளோ என்னவோ மிக கவனமாக எளிமையாக எடுத்தேன், சாலை விபத்தை பற்றி. ஒரு ஆசிரியர் அந்த படம் பார்த்து' இது ஒரு படமா 'என சிரித்தார். சாலை விபத்து போன்ற கொடுமையான ஒன்றை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மனநிலை. பல விபத்துக்களை என் நுண்நுணார்வால் தப்பித்துள்ளேன், அதை என்னாலேயே நம்பமுடியவில்லை மற்றவர்கள் எப்படி,.... வாகனம் திடீரென சுண்டி இழுக்க வேகத்தை குறைக்கிறேன் என்னை தாண்டி சென்ற ஒரு வாகனம் ஆட்டோ க்கடியில் மாட்டி விட்டது, வாகனம் நம்மை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்கிறதோ என தோன்றுகிறது. நேற்று என் நண்பன் ஒருவனுக்கு விபத்து ஏற்பட்டது, பெரிதாக ஒன்றும் இல்லை அவனுக்கு, மருத்துவமனை சென்று TT ஊசி போட்டு வரும் வழியில்,.. விபத்து நடந்த இடத்தில் விசாரித்து விட்டு CCTV ...

11-09-2024

Image
       வியாபார யுத்திகள் எவ்வளவு காலம் ஆனாலும் கற்றுக்கொண்டே இருக்க நேறும் போல.           இன்று விஜய் சேதுபதியின் " இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " படம் பார்த்தேன், நீண்ட நாட்கள் ஆகிவிட்டது வயிறு வலிக்க  சிரித்து.       தீடீரென இந்தப் படம் பார்க்க தோன்றியது, முன்பு எப்போதோ பார்த்தது, இன்று பார்க்கும் பொழுது சில விடயங்களை கண்டேன்.     விஜய் சேதுபதியின் பல படங்கள் என் மனதில் நீங்கா இடம் பெற்றவை,  காதலும் கடந்து போகும், 96, தென்மேற்கு பருவகாற்று, மாமனிதன், தர்மதுரை, கடைசி விவசாயீ, இறைவி,  ஆண்டவன் கட்டளை, ஆரஞ்சு மிட்டாய்,என இவரின் பல படங்கள் பொழுது போக்கையும் தாண்டி நம்மை ஏதோ செய்கிறது. இயல்பான நடிப்பை விட ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்கிறார். சினிமா உள்ளவரை நினைக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்.   நன்றி சேது. இன்று உடல் கலைப்போடு ஒரு வேலை செய்ய துடங்கினேன் இறுதியில் சுறுப்பு சுறுப்பு அடைந்தேன். நாம் செய்யும் வேலை பிறரை பாதிக்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

10-09-2024

Image
                                     வெண்முரசு நாவலை இடை நிறுத்தி விட்டு சில புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன் , மருபூமி சிறுகதை தொகுப்பு முடித்துவிட்டு " சிவா முழுத்தொகுதி " மூன்று பாகங்கள் கொண்ட புத்தகங்களை கையில் எடுத்தேன் . சிவன் மீது உள்ள ஆர்வத்தினால் அவரைப் பற்றி முழுமையாக படிக்க ஆசை பட்டேன்.                                     பிப்ரவரி 29 -ல் வாசிக்க தொடங்கினேன் மெலுகாவின் அமரர்கள் என்ற முதல் பாகத்தை , இன்று தான் மூன்று புத்தகங்களையும் முடித்து இருக்கிறேன் , 7 மாதங்கள் ஆகியுள்ளது , காரணங்கள் பல ,நேரமின்மை தான்  முதல் காரணம். இந்த புத்தகத்தை ஏன் தேர்வு செய்தோமோ என மிக வருந்தினேன் , உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம் 3.5 லட்சம் பிரதிகள் விற்ற புத்தகம் , என் மனதுக்கு புடிக்கவில்லை என்றாலும்  நிறைய புதியவனவற்றை  கற்றுக்கொண்டேன் .    இதில் உள்ள பல முரணான தகவல்கள் ரசிக்கும் ப...

9-09-2024

Image
 மெய்யழகன் என்ற படத்தில் இருந்து கமலின் குரலில் ' யாரோ இவன் யாரோ' என்ற பாடலை காலை முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு 200 பக்கங்களுக்கு மேல் படித்துள்ளேன் இன்று, மனம் மிக மெல்லிசாகவும் அமைதியாகவும் உள்ளது. இப்பொழுது கிடைக்கும் வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமான சன்மானம் கிடைக்கும் வேலைக்கு செல்லவா என கேட்ட போது,  ' வேண்டாங்க அதெல்லாம் நீங்க இப்டியே இருங்க இதான் நம்ம எல்லாருக்கும் சந்தோஷம் ' எனக்கூறும் மனைவியும், "அதெல்லாம் நிம்மதி குடுக்காது பா இருக்குறத வச்சு நல்லா வாழ்வோம் " எனக் கூறும் தாய் தந்தையும் கிடைக்க நான் செய்த புண்ணியம் என்னவோ. நீலனை பார்த்து பரவசம் கொள்கிறேன் மகிழ்ச்சி அடைகிறேன், அவன் மகிழ்வானவன், எப்பொழுதும் அவன் முகத்தில் சிரிப்பு. இன்று பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்கிவிட்டேன். நன்றாக சாப்பிட்டேன், பருப்பு குழம்பு வெங்காயம் முட்டை சுவையாக இருந்தது. சில மனிதர்களின் அர்த்தமற்ற வார்த்தைகள், ஒன்றும் அறியாத மனதில் ஏற்படுத்தும் வலியும் அழுகையும் கண்டேன் நேற்று, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சமாதான சொற்கள் கூறினேன்.

8-09-2024

Image
 இன்று ஏனோ மனநிலை கொஞ்சம் காரணம் இல்லாத சோகத்தில் இருந்தது. ஒரு சுபநிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வந்தேன், என் மீது எனக்கே கோபம். இனிமேலாவது யோசித்து செயல்பட வேண்டும். ' 5 centimeters per second ' என்ற அனிமே படம் பார்த்தேன், மூன்று விதமான கதை, மூன்றுமே மூச்சை அடைத்தது. மகட்டோ சிங்காய் மீது பற்று அதிகம் ஏற்பட்டது.  அனிமே உலகத்தில் வாழ தீராத ஆசையும் மோகமும் ஏற்பட்டுள்ளது. வயதும் நமக்கு ஏற்படும் அன்றாட பிரச்சனைகளும் நமது சூழலும், கலையையும் இயற்கையையும் முழு மனதார ரசிக்க விடுவதில்லை ஆனால் ஒரு நொடியில் அனைத்தையும் மறந்து வெற்று யோசனையில் உள் நுழைய வேண்டும், அப்படி பழக திடமான மனதும் கிறுக்குத்தனமும் வேண்டும். நேற்று இரவு 100 பக்கம் படித்தேன். ஆன்மிகச் சிந்தனை எனக்குள் முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதோ என தோன்றுகிறது.

7-09-2024

Image
     இன்றய நாள் முழுவதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. வருத்தம் இல்லை ஏக்கம் இருக்கிறது. சில நல்ல கட்டுரைகளை வாசித்தேன், பொறாமை கொண்டேன் நானும் இதை போல் எழுதவேண்டும் என.      சுப நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன, கிராமமே கலகலப்பாக உள்ளது.       இன்று விநாயகர் சதுர்த்தி,  எனக்குள் இதுநாள் வரை இருந்த விநாயகரின் பின்பம் வேறு ' வாயுபுத்திரர் வாக்கு ' நாவலின் விநாயகர் என்னை ஆக்கிரமித்துவிட்டார். காலையில் டீ குடிக்காதது இன்று முழுவதும் தலை வலித்தது. இரவு சிறிது நேரம் வாசிக்க வேண்டும் 

6-09-2024

Image
  ஒருவர் தன்னை மாற்றுத்திறனாலி என முன்வைக்கும் கட்டாயத்தின் வலியை அறிந்தேன்.    வாழ்வின் உன்னதமான நினைவுகளையும் நிகழ்வுகளையும் புறம் தள்ளிவிட்டு,  மிகச்சிறுமையானவற்றை முதன்மை எனக்கொள்ளும் மனிதரைப் பார்த்து புன்னகை புரிந்தேன், அவரிடம் சில தத்துவங்களையும் பொழிந்தேன், வார்த்தையை விரயம் செய்து விட்டேன் என இப்போது தோன்றுகிறது.        சில நாட்களாக  அதிக உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் அசதி அதிகமாக உள்ளது.        இன்று தொடர்ச்சியாக 100 பக்கங்களுக்கு மேல் படித்தேன் சூரியவெளிச்சத்தில். அரை மணிநேரம் உறங்கியது மிக புத்துணர்வாக இருந்தது. தீவிரமான வெயிலின் தாக்கதோடு சற்று குழுமையான புங்கை மர நிழலில் நின்று பூபதிராஜாவிடம் தொலைபேசியில் பேசினேன் சிறிது நேரம் மகிழ்வாக இருந்தது.

5-09-2024

Image
                  மோகட்டோ சிங்காய் ன் காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது வெளி வரமுடியவில்லை,. Suzume ன் பாடல் ஒன்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது, காதில் கேட்க்கிறது.  https://youtu.be/Xs0Lxif1u9E?si=XvJKskFMLu377gOb        இன்று கடையில் நின்றுக்கொண்டே வாசித்தேன், 100 பக்கம் தாண்டி வாசித்தேன்,. நீலனை வைத்து இருந்தேன் வெளியில்.         " வாயுபுத்திரர் வாக்கு "  புத்தகத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும்.இப்புத்தகத்தில் சில வித்தியாசமான தத்துவங்களை கற்றுக்கொண்டேன், தவளை தத்துவமும், பரிணாமம் பற்றிய ஒன்றும். வெண்முரசை இடை நிறுத்தி விட்டு சிவா முழுதொகுதி படிக்க வந்தது நீண்ட நாட்களை தின்றுவிட்டது வருத்தம். இன்று raj b setty ன் ஒரு கன்னட படம் பார்த்தேன், இவரின் பல படங்கள் பார்த்துள்ளேன், நல்ல நடிகர். வாழ்வை பற்றிய வித்தியாசமான கவிதை புத்தகம் வாசித்தது போன்ற அனுபவம் தந்தது இந்தப் படம். இன்று நன்றாக குளித்தேன் நீண்ட நேரம்  சில பாடல்கள் கேட்டேன்,இதமாக இருந்தது.சில நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளை...

4-09-2024

Image
 இன்று அறைக்குள்ளேயே உடற்பயிற்சி செய்தேன் தூக்ககலக்கம் அதிகமாக இருந்தது. காலையில் பால் வர தாமதம் ஆனது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. டீ அருந்தாமல் சென்றுவிட்டேன், இந்நாள் முழுவதும் தலை வலித்தது. ஆடுஜீவீதம் படம் பார்த்து முடித்தேன், கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது, மகாலட்சுமி க்கு புடித்திருந்தது இருந்தும் பயம். சில காட்சிகள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே உணர முடிந்தது ஆச்சரியம். ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன், அறிந்து கொண்டேன். அஜிதன் சகோ விடம் வாட்ஸாப்ப் ல் பேசினேன். இன்று முதல் குழாய் கடை மூன்று நாட்கள் விடுமுறை இதை பயன் படுத்தி சிவா புத்தகத்தை முடிக்க வேண்டும் 600 பக்கங்களுக்கு மேல் உள்ளது. பார்ப்போம். நந்தினி யிடம் எலான் மஸ்க் பற்றி பேசினேன், அவளுக்கு அவரை தெரியாதது எனக்கு வியப்பாக இருந்தது. மாலையில் the garden of words படம் பார்த்தேன். அனிமே படங்கள் என் இதயத்தை மேலும் மேலும் கனிவாக்குகின்றன. அனிமே பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். மகிட்டோ சிங்காய் படங்கள் மட்டுமே பார்த்தால் போதும். அது தனி உலகம். சொல்வதற்கு வார்த்தைகளை வளர்த்து தனியாக எழுதுகிறேன் அதை பற்றி,. சரக்கு எடுத...

03-09-07

 இன்று சூரியன் உதிப்பதை உணர்ந்து கொண்டே மழைச்சாரலில் வீட்டின் மேல் பகுதியில் உடற்பயிற்சி செய்தேன் , இரவு நன்றாக உறங்கினேன் . வியாபாரம் நன்றாக சென்றது , வானிலை அழகாக இருந்தது . ஆடு ஜீவிதம் படம் பாதி பார்த்தேன் , புத்தகம் தந்த பிரமிப்பு படத்தில் எனக்கு ஏற்படவில்லை , நாளை மீதியை பார்க்க வேண்டும் . வளையம் போட சென்றேன் 200 போட்டேன் , ரீச்சார்ஜ் ஜெராக்ஸ் வேலைகளை செய்தேன் , நாளை வியாபாரத்திற்கு சரக்கு எடுத்து வைத்தேன் , மாலையில் 1 கிலோமீட்டர் நடந்தேன் .  தினமும் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவது இல்லை , அன்றாட சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அதன் போக்கில் நம் நேரங்கள் சென்று விடுகிறது . இனி இன்னும் கொஞ்சம் திட்டம் தீட்டி நேரத்தை நம் கையில் கொண்டு வரவேண்டும் . பார்ப்போம் வெல்வோம் .

2-09-2024

Image
 இன்று காலையில் ஓடயளவில்லை ஆனால் சிறிது உடற்பயிற்சி செய்தேன் . இன்று வானிலை  சிறப்பாக இருந்தது , இன்று பகலில் இரண்டு மணிநேரம் உறங்கிவிட்டேன் . அஜிதன் எழுதிய " மாரிட்ஜானின் உடல் " என்ற சிறுகதையை வாசித்து ரசித்தேன் , சிறந்த அனுபவமாக இருந்தது . அஜிதன் அவர்களிடம் இணையத்தில் என் அனுபவத்தை பகிர்ந்தேன் , மகிழ்ச்சியாக இருந்தது .  ' THE DICTATOR ' என்ற படம் பார்த்தேன் , புதிய முயற்சியாக இருந்தது , ரசித்தேன் .  அட்டையை ஒரு புதியவரிடம் எடைக்கு போட்டோம் . இன்னும் கொஞ்சம் செறிவாக நேரத்தை பயன் படுத்த வேண்டும் . தினம் 100 பக்கமாவது படிக்க வேண்டும் .

1-09-2024

 ஏதேதோ எண்ணங்கள் நிறைய கனவுகள் , தடையாக மூளைச்சோம்பல் , இந்த வருடமே முடியப்போகிறது இன்னும் நிறைவாக ஒன்றுமே எழுதவில்லை .இன்று முதல் தினமும் எழுத வேண்டும் .நேற்று கடையில் குளிர்சாதனப்பெட்டி வைக்கும் இடத்தில் மாற்றம் செய்தோம் . ஜெராக்ஸ் ரூம் ல்  ஒரு செட்டப் செய்தேன் , நேற்று முழுவதும் வேலையிலேயே ஓடிவிட்டது . லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற படம் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது , 1960 ல் இப்படி ஒரு படம் எடுத்தது அதிசயம் .ஜமா என்ற படம் இன்று பார்த்தேன் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது , கல்யாணம் என்ற முதன்மை கதாபாத்திரம் ஓடிக்கொண்டே இருக்கிறது நினைவில் . சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து 20 நாட்கள் அதிகாலையில் ரன்னிங் சென்றேன் , அப்போது மனதும் உடலும் துடிப்பாக இருந்தது , அம்மாவிற்கு உடல்நிலை மோசமானதில் இருந்து நிறுத்தி விட்டேன் , மறுபடியும் ஓடாததிற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதை சொல்லி நிறுத்தாமல் , மீண்டும் ஓட வேண்டும் . நாளை முதல் மீண்டும் ஓட்டம் தினமும் எழுத்து இரண்டையும் தொடரவேண்டும் . புத்தகவாசிப்பும் குறைவாகவே செய்கிறேன் , அதையும் அதிகப்படுத்த வேண்டும் . எல்லாம் நல்லபடியாக ...