விபத்துக்கள்

            

       " ROAD " என நான் ஒரு குறும்படத்தை கல்லூரியில் இயக்கினேன். அதை இயக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தேன்.

வழக்கம் போல என் நண்பர்களையே நடிக்க வைத்துஇருந்தேன்.

https://youtu.be/C5J1mB-QXGU?si=YrDp0LkAu9N0OFlZ

சபரி, சங்கிலி, சுந்தர், துரைபாண்டி, என் நண்பர்கள் என்பதாளோ என்னவோ மிக கவனமாக எளிமையாக எடுத்தேன், சாலை விபத்தை பற்றி.

ஒரு ஆசிரியர் அந்த படம் பார்த்து' இது ஒரு படமா 'என சிரித்தார்.

சாலை விபத்து போன்ற கொடுமையான ஒன்றை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மனநிலை.




பல விபத்துக்களை என் நுண்நுணார்வால் தப்பித்துள்ளேன், அதை என்னாலேயே நம்பமுடியவில்லை மற்றவர்கள் எப்படி,....

வாகனம் திடீரென சுண்டி இழுக்க வேகத்தை குறைக்கிறேன் என்னை தாண்டி சென்ற ஒரு வாகனம் ஆட்டோ க்கடியில் மாட்டி விட்டது, வாகனம் நம்மை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்கிறதோ என தோன்றுகிறது.


நேற்று என் நண்பன் ஒருவனுக்கு விபத்து ஏற்பட்டது, பெரிதாக ஒன்றும் இல்லை அவனுக்கு, மருத்துவமனை சென்று TT ஊசி போட்டு வரும் வழியில்,.. விபத்து நடந்த இடத்தில் விசாரித்து விட்டு CCTV பார்த்தேன் இவன் மீது தான் தவறு,.. ஒரு வினாடி தலையை திருப்பா விட்டால் மரணம் நெர்ந்து இருக்கும்,. தலைக்கவசம் காப்பாற்றியது.

Comments

Popular posts from this blog

5-10-2-2024

முதல் சிறுகதை - இளங்காவல்