காளையார் கோவில் பயணம்
காளையார் கோவில் பயணம் காளையார் கோவில் முன்பு சிறு வயதிலேயே பொன்னியின் செல்வன் படித்ததால் சோழதேசம் மீதும் அந்தக் கதாபாத்திரங்கள் மீதும் தீராத காதல் , கல்லூரிக் காலத்தில் ஒரு ஆசிரியை எனக்கு பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை அறிமுகம் செய்து வைத்தார் , நான் ஒரு கட்டிட பொறியாளன் என்பதாலோ என்னவோ பெரிய கோவிலின் மீது மிகப்பெரிய பட்று வந்தது உடையார் நாவலின் கடைசி ஐம்பது பக்கங்களை கோவிலில் வைத்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு பாகங்களை உடைய உடையார் நாவல் 3600 பக்கங்கள் கொண்டது . புத்தகங்களின் வழியே உலகத்தை ரசிக்கும் வாசகன் நான் ,என்னைப் பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் நண்பர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக் கொள்கிறேன் , உடையார் நாவலை அறிமுகம் செய்த ஆசிரியைக்கும் இந்நேரம் நன்றியைக் கூறிக் கொள்கிறேன் . என்னுடைய பெரிய கோவில் பயணத்தையும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத்தால் விவரிக்க என்னால் இயலாது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குள் செல்லும் போது எனக்கு எந்த மாதிரி ...