DUNKIRK - ஒரு பார்வை


 

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்களில் மிக முக்கியமான படம் "Dunkirk"

2017 ஆம் ஆண்டு வந்த இப்படத்தின் மொத்த நேரம் 1.46 மணி நேரம் மட்டுமே

இதுவரை வெளி வந்த போர் பற்றிய படங்களில் சிறப்பான படம் Dunkirk

இது ஒரு உண்மை சம்பவத்தை மய்யப் படுத்தியது,

1940ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரின் போது  கப்பல் வழியாக படகுகள் வழியாக 198000 பிரிட்டிஷ் வீரர்களும் 140000 ப்ரான்ஸ் வீரகளும் காப்பாற்ற பட்டனர், அதை சுவாரசியம் குறையாமல் திக் திக் என கதை சொல்லுகிறார் நோலன்.

மற்ற போர் படங்களில் சண்டையும் ரத்தமும் வீரமும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இது மனிதநேயத்தை சொல்கிறது.

நடிகர் " சிலியன் மர்ப்பி " யை படத்தில் பார்க்கவும் அதிர்சிக்கு உள்ளானேன் அவர் ஏற்றிருந்த காதாப்பாதிரம் பார்த்து,.

அனைத்து போர் வீரர்களையும் காப்பாற்றி அனுப்பிய பின்பும் அடுத்த நாட்டு வீரர்களுக்காக காப்பாற்ற காத்திருக்கும் உயர்அதிகாரியின் மனம் கண் கலங்க வைக்கிறது.

எப்போதுமே எந்த கிராபிக்ஸ் ம் இல்லாமல் படம் எடுக்க முனையும் நோலன் இப்படத்திற்காக எத்தனை கப்பலை உடைத்தார் என தெரியவில்லை,.

2012 என்ற படத்தில் உலகம் அழியும் நேரத்தில் கூட தன் கடமையை தவறாமல் செய்யும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை கவனித்திருப்பீர்கள், அதே போல் மேலும் பல படங்களில் தன் ராணுவ போலீஸ் அதிகாரிகளை முழுவதும் நல்ல விதமாகவும் பெருமை படுத்தும் விதமாகவே காட்டி இருப்பார்கள் அதுதான் உண்மையும் கூட அங்கு வருமானத்துக்காக எவரும் அப்புனிதமான பணிகளில் சேர்வதும் இல்லை சேர்க்க படுவதும் இல்லை,.. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை நான் சொல்ல தேவை இல்லை,.

பாஞ்சாலக்குறிச்சி யில் 1800 களில் ஊமைத்துறை யோடு போறிட்டு மாண்ட பிரிட்டிஷ் வீரர்கள் ன் கல்லறை ஒன்று உள்ளது 44 கல்லறை இத்தனை வருடங்களாக இன்னும் பராமரிப்பில் உள்ளது காரணம் 300  வருடங்களுக்கும் மேலாக இது போன்ற அனைத்து பிரிட்டிஷ் கல்லறைக்கும் (இந்தியாவில் உள்ளதற்க்கு ) இன்னும் காசு தருகிறது பிரிட்டிஸ் அரசு காரணம் அவர்களின் தியாகிகள் அவர்கள்.

எழுத்தாளர் சுஜாதா இந்தியன் படத்தில் எளிதியது நினைவுக்கு வருகிறது " அங்கு கடமையை மீறதான் லஞ்சம் இங்க கடமையை செய்றதுக்கே லஞ்சம் "

அவர்கள் நாட்டில் சிறுவர்களுக்கு பிறந்தநாள் மற்றும் திருமணங்கலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும் முதலில் மரியாதை செய்வது தியாகிகள் கல்லறைக்கு சென்று தான், எப்படி எல்லாம் நாட்டு பற்றை வளர்க்கிறார்கள்,..

இங்கு ஆகஸ்ட் 15 ஜனவரி 26 இரண்டு நாட்களோடு தேசப் பற்று காத்தோடு போய்விடுகிறது.

நம் நாட்டில் தியாகிகள் இறந்து ஒரு வாரத்தில் மறந்து போவோம், செலவுக்கு காசும் ஒரு வேலையும் குடுத்தால் முடிந்தது கதை.

தியாகிகள் பெயரில் பள்ளி கல்லூரி மற்றும் தெருக்கள் இருப்பதை விட ஜாதி பெயர்களில் இருப்பதே அதிகம்,..

கூச்சம் இல்லாமல் தோற்று தான் போகிறோம் நாம் தேசபற்றில்.

எந்த ஒரு படத்திலும் கதைநாயகர்கள் முக்கியமான பொறுப்பில் இருப்பார்கள் ஆனால் இதில் கடை கோடி போர் வீரர்களின் மனதை காட்டுகிறார்,

 வானில் தன்னந்தனியாக போராடி நாட்டுக்கு வெற்றியை தந்து விட்டு தான் வேற்று நாட்டிடம் கைது செய்யபடும் அந்த விமானி யின் தியாகம், " நம் இந்திய நாட்டில் சுதந்திர போராட்டத்தில் போராடி மாண்டவர்கள் பலரை நாம் அறியாமல் இருப்பதை நினைவு படுத்துகிறது ".



எது வெற்றி அடுத்த நாட்டை கைப்பற்றுவதா எதிரியை வெல்வதா இல்லை " உயிர் வாழ்வதே " வெற்றி என சில இடங்களில் சொல்லாமல் சொல்லி செல்கிறார் நோலன்.


இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொறுமையாக இருந்து பார்க்கிறது அந்த கடல், அநேக நேரம் கடலை உயரமான இடத்தில் இருந்து காட்டுவதன் காரணம் இது கொஞ்சம் அசைந்தால் நாடு என்ன ஆகும் என்பதையும், இயற்கைக்கு முன்னால் எவரும் ஒன்றும் கிடையாது என்பதை உணர்த்த தான்.

தினமும் எவ்வளவோ நேரம் செலவழிக்கிறோம் ஒரு ஒண்ணே முக்கால் மணி நேரம் செலவு பண்ணி Dunkirk பாக்கலாம் தப்பு இல்லை.

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்