குமரித்துறைவி- வாசிப்பு அனுபவம்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஜோ.டி.குரூஸ் எழுதிய " ஆழி சூழ் உலகு " நாவலில் சில இடங்களில் மெய்சிலிர்த்தேன் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் ஆன தொடர்பை நினைத்து . மதம் மாறிய மீனவர்கள் மச்சான் சுவாமிக்கு ( முருகனுக்கு ) நடுக்கடலில் இருந்துகொண்டு திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்து தேங்காய் உடைக்கும் சடங்குகள் . திமிங்கலங்கள் படகை சூழ்ந்த போதும் குமரி அம்மன் காப்பாற்றுவாள் என எண்ணுவது. இரண்டு வரிகளில் உள்ள இரண்டு சம்பவங்கள் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது வாசிக்கும்...