வேர்கள் - நாவல் வாசிப்பு அனுபவம்
4.03.2022 - ல் வாசிக்க ஆரம்பித்தேன் 14.03.2022 - ல் 911 பக்கங்களும் நிறைவு பெற்றது , மனது ஏனோ திகைத்து நிற்கிறது.
சூரிய வெளிச்சம் படாத ஆழ்கடலின் அடியில் உலாவும் மீன் அறியாது இப்பிரபஞ்ச உலகின் தோற்றத்தை .நாம் சுவைக்கும் மாம்பழம் அறியாது எப்போது ஊன்ற பட்ட மாமரத்தின் எத்தனாவது தலைமுறை தான் என்பதை .அதே போல் நம் மூதாதையர்கள் பற்றி நாம் ?
அலெக்ஸ் ஹேலி என்ற எழுத்தாளர் தலைமுறை தலைமுறையாக செவிவழி சொல்லபட்டு வந்த தன் சொந்த பாட்டனின் கதையை ,தன் குல வரலாறை தேடி கண்டடைந்தது ஆப்ரிக்க கருப்பின மக்களின் துயரம் தோய்ந்த மற்றும் அழகிய கலாச்சார வாழ்வியலை .
12 ஆண்டு கால கடின தேடலும் ,ஆராய்ச்சியும், மூன்று லட்சம் km தூர பயணங்களும், ஒரு வரலாற்றை பதிவு செய்ய அந்த இனத்தில் ஒருவனாகவும் ,எழுத்தாளனாகவும், அலெக்ஸ் ஹேலி செய்த தியாகம் போற்றுதலுக்குரியது அதனால் தான் எழுதி முடித்து 46 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பேசுகிறோம் .
இப்படி ஒரு புத்தகத்தை அச்சுபிசாகமல் மூல நூலுக்கு இணையாக (Roots) தமிழில் (வேர்கள் ) மொழி பெயர்த்த பொன்.சின்னதம்பி முருகேசன் அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குறியது ,வணக்கத்திற்குறியது , தமிழ்ச்சமூகம் என்றும் கடன் பட்டுள்ளது அந்த மனதுக்கு .
கைரபா குண்டே கிண்டே - வில் தொடங்கி அலெக்ஸ் ஹேலி வரை ஏன் ஒட்டுமொத்த இனத்திலும் அத்தனை துயரங்களுக்கும் அல்லல்களுக்கும் மத்தியில் ஆன்மீக இழை ஒட்டியே வருவது வியப்பளிக்கிறது .
நம் குல வரலாற்றை நமக்கு தெரிந்த அளவாவது வரும் தலைமுறைக்கு சொல்லி வைப்போம் அல்லது நம் மூதாையர்களின் பெயர்களையாவது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு வைப்போம் உச்சரிக்க தகுந்தார்போல்.
விலை கொடுத்து வாங்கியது என்னவோ 1000 ரூபாய் தான் வாசித்து முடித்தது என்னவோ 10 நாட்களில் தான் ஆனால் பெற்றது ? ஒரு ஏழு தலை முறையின் அனைத்து விதமான அனுபவங்களை அதற்கு எதை ஈடு கொடுத்தாலும் தகாது .
( 1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது.
ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.
தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது.
இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை என்று கூற படுகிறது .)
இனம் , மொழி , கலாச்சாரம் , வெவ்வேறாக இருந்த போதிலும் உணர்ச்சிகள் ஒன்று தானே ? அந்த அடிமை முறைகள் தற்போதும் நாகரிகமாக எங்கும் தொடர்வது வருத்தத்தை அளிக்கிறது .
இறுதி இரண்டு அத்தியாயங்கள் இருதயத்தின் துடிப்பை கூட்டுகிறது, அலெக்ஸ் ஹேலி -ன் மன உணர்வை உணர முடிகிறது.
குண்டா கிண்டே , பெல் ,டாம் லியோ, மாங்கோ மாமா , கிஸ்சி , கட்டுச்சேவல் ஜார்ஜ், ஐரின் , என ஒவ்வொரு பாத்திரமும் சிலிர்க்க வைக்கிறது .
இந்நாவல் மூலம் பெற்ற பலன்களை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை வாசித்து அனுபவித்து புரிந்து கொள்ளுங்கள் .
சில பக்கங்களின் தாக்கமே ஆடுகளம் படம் உருவாக காரணம் . Roots நாவலை வாசிக்க பரிந்துரை செய்த வெற்றி மாறனுக்கு நன்றி .
Comments
Post a Comment