லைப் ஆப் பை - வாசிப்பு அனுபவம்

சிலர் வருடத்திற்கு ஒருமுறை பிடித்த இடத்திற்கோ பிடித்து கோவில்களுக்கோ சென்று வருவர் , அதேபோல நான் வருடத்திற்கு ஒரு முறை சில புத்தகங்களை வாசிப்பதும் சில படங்களை பார்ப்பதும் உண்டு , அதில் ஒரு படம் " Life of Pi " . நம் ஆன்மாவை கழுவி நம் மனதிற்கு ஒருவித பேரலையை தரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று . நாவல் வெளிவந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின் படமாக்கப்பட்டது . அந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போது . படம் ஏற்படுத்தியதைவிட புத்தகம் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது . ஆழ்ந்த மயான மன அமைதிக்கு மனதை அழைத்துச் செல்கிறது , உணர்வுகளை வெளிப்படுத்த தெரியவில்லை . 20 நாட்களில் வாசித்து வாழ்ந்ததற்கே இப்படி என்றால் , 220 நாட்களுக்கு மேல் கடலில் மழைத்துளியின் அணுவைக் கூட ரசித்து வாழ்ந்த படேலின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இது கற்பனைக் கதைதானா என நினைத்து சந்தேகம் கொண்டேன். நாவலை வாசிக்கத் தொடங்கிய பின்பு தான் தெரிந்தது இது முற்றிலும் உண்மை கதை என்று . கனடாவிலிருந்து நல்ல கதையை தேடி இந்தியாவிற்கு பயணப்பட்டு வந்த யான்மார்ட்டேல் , பாண்டி...