பற்று - குறும்படம் எழுதியது

 







" The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.” 




கதாபாத்திர வடிவமைப்பு :-


சுரேஷ் - படித்து முடித்த பட்டதாரி,அரசு வேலைக்காக காத்திருப்பவன்,கோவக்காரன், youtuber ,பெரியாரிஸ்ட்,

ஆனந்த் - ரோபோடிக் ஆராய்ச்சி மாணவன் , நிதானமாணவன்,தொலைநோக்குப் பார்வை கொண்டவன்,ஆத்திகவாதி.

மர்ம நபர் - ஆனந்த் போன்ற தோற்றம் உடையவன் .

சிறுவன் - வேகமாக பேசுபவன் .


.(காலம் - 1 PM) இடம்-மலைமீது


ஆனந்த்- நான் எடுக்கிறேன் நீ கொஞ்சம் தள்ளி நின்னு ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணு. (ஒரு மணி ஆச்சு சீக்கிரம் , கீழ போக வேணாமா ? ) 

சுரேஷ்-போடா எல்லாம் உன்னால தான் .

ஆனந்த் - சரி சரி .பேசு

சுரேஷ் - சாரி காய்ஸ் , இன்னைக்கு காலைல இருந்து எடுத்த அத்தனை புட்ஏச்சும் எப்படியே டெலிட் ஆயிடுச்சு.சாரி இன்னைக்கு ஃபர்ஸ்ட் நம்ம எங்க இருக்கோம் அப்படினா .


( ஆனந்த் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான் சுரேஷ் மலையில் ஒரு விழிம்பில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறான் ,ஆனந்த் கொஞ்சம் நெருங்கி வருகிறான் சுரேஷ் பின் நகர்கிறான் பள்ளத்தில் விழுந்து மறைகிறான்.ஆனந்த் எட்டிப் பார்த்து வியப்பில் ஆள்கிறான் .பயத்தோடும் பதட்டத் தோடும் கண்ணீரோடும் காண்கிறான் கீழே )


ஆனந்த் கத்தி அழுது புலம்புகிறான் தலையில் மாத்தி மாத்தி அடிக்கிறான் ஒரு மரத்தடியில் சாய்ந்து கத்துகிறான் வேகமாக மூச்சு விடுகிறான் கைகளைத் தேய்த்துக்கொண்டு வேகமாக படிக்கட்டில் இறங்குகிறான் . ஒவ்வொருவரிடமும் விசாரிக்கிறான் கீழே எப்படி செல்வது என் நண்பன் விழுந்து விட்டான் தவறி .பித்துப் பிடித்தவன் போல் அலைகிறான் மேலும் கீழும் .

ஒரு படிக்கட்டில் அமர்ந்து இழுத்து மூச்சு வாங்கிவிட்டு மெதுவாக இறங்கி செல்கிறான் வீட்டிற்கு ....திரும்பி மலையை ஒரு பார்வை பார்க்கிறான் ,வானத்தை சிறிது நேரம் பார்க்கிறான்.இறங்கிச் செல்கிறான் வெறிகொண்டு .


காலம் -7 மணி . 


1

ஒரு பயணம் .(இடம் -வத்திராயிருப்பு ரோட்டில்)

பைக்கில் ஆனந்த் - ம் சுரேஷும் பேசிக்கொண்டே செல்கின்றனர். 

சுரேஷ் - ச***** சொல்றத மட்டும் கேளு , 2020 இல் இருந்து இரண்டாயிரத்துக்கு போவாரா 2040 போவாரா இதெல்லாம் படத்துல தான் நடக்கும் நிஜத்துல ஊ*** கூட முடியாது.


ஆனந்த் - அண்ணே 50 வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்துக்கிட்டு அமெரிக்காகாரன் கூட பேசுவோம் -னு சொன்னா எவனும் நம்பி இருக்க மாட்டான் ,வானத்தில பறந்து போவோம் ன்னு சொன்னா எல்லாம் சிரிச்சிருப்பாய்ங்க .அந்த மாதிரி காலப்பயணமும் கைகூடும் .


சுரேஷ் - என்னத்தை யாச்சு சொல்லி சமாளிக்காத டா , நீ சயின்டிஸ்ட் பெரிய படிப்பெல்லாம் படிக்க ,நீ சொல்றது நடந்தால் பார்க்கலாம் .


2

பைக் வேகமாக சென்று கொண்டே இருக்கிறது .


ஆனந்த் வண்டியை ஓரம் கட்ட சொல்லி யூரின் போகிறான் .சுரேஷ் செல்பி ஸ்டிக்கில் மொபைலை மாட்டி பேசுகிறான்.

சுரேஷ் - ஹலோ காய்ஸ் , நான் உங்க சுரேஷ் ,இன்னைக்கு நாம எங்க போக போறோம் தெரியுமா ? சதுரகிரி மலையில யேற போறோம் , எனக்கு இதுல விருப்பமே இல்லை என்னோட பிரண்டு ஆனந்து கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டாரு .ஆனந்த் ஆனந்த் இங்கே வாடா சீக்கிரம், இவன்தான் ஆனந்த் , எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பேசப்பட போகிறவர் , நிறைய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க போறார் (சிரிக்கிறான் சுரேஷ் ) (ஏய் சும்மா இரு ணே) , ஓகே காய்ஸ் வீடியோ குள்ள போகுறதுக்கு முன்னாடி பண்ண வேண்டியது எல்லாம் பண்ணிருங்க தயவு செஞ்சு . 


பைக் மீண்டும் வேகமாக செல்கிறது .ஆனந்த் செல்பி ஸ்டிக்கை சுரேஷை பார்த்தவாறு புடித்து உள்ளான் சுரேஷ் பேசுகிறான் .


சுரேஷ் - காரல் மார்க்ஸ் சொன்னது ஒன்னு ஞாபகம் வருது காலமே மூலதனம் உழைப்பே மூலதனம் ,இதை ஏன் சொல்றேன்னு. எனக்கே தெரியல . ஓகே காய்ஸ் , இப்ப நம்ம வாசல் பக்கத்தில நெருங்கிட்டோம் , 


ஆனந்த்-அண்ணே கை வலிக்கு சீக்கிரம் .

சுரேஷ்- ந்ச்ச் பேசிக்கொண்டிருக்கும்போது குருக்க பேசக்கூடாது டா எடிட்டிங்ல ரொம்ப கஷ்டமா இருக்கும் . காய்ஸ் இது நம்மளோட முதல் மலை பயணம்....

3

பைக் வேகமாக செல்கிறது .(ஒரு நல்ல இசையோடு பயணம் செல்கிறது)

நேரம் -8 மணி இடம்-மலை அடிவாரம்


சுரேஷ்- ஆனந்து எத்தனை கிலோமீட்டர் மேல ஏறனும் ?

ஆனந்த்- பக்கத்துலதான் போய்ல்லாம் என்கூட ஏ வா

சுரேஷ்-டேய் வீடியோல சொல்லனும் டா 

ஆனந்த்-அண்ணே இதான் அ முத டிராவல் வீடியோ ல சும்மா அடிச்சுவிடு 

சுரேஷ் - செல்பி ஸ்டிக்கை கொடு ( வாசலில் நின்றவாறு இருவரும் போட்டோ பிடித்து கொள்கின்றனர் )

ஆனந்த் டிக்கெட் வாங்குகிறான்.


5

இரண்டு டிக்கெட்டையும் கையில் வைத்தவாறு சுரேஷ் வீடியோவில் பேசுகிறான் . -காய்ஸ் மேல போறதுக்கு டிக்கெட் வாங்கியாச்சு ,ஆனந்த் நான் முதல்ல போறேன் நீ பின்னாடி வா -என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறான்.

ஆனந்த் - வேமா மேல போய் என்ன செய்யப் போற 

ஆனந்த் சிரித்துக்கொண்டு மெதுவாக நடக்கிறான் .


6

ஆனந்த் மெதுவாக நடந்து செல்கிறான் ஓர் இடத்தைப் பார்த்து சிரிக்கிறான் . 

ஆனந்த்- என்னண்ணே வேகமா ஓடி வந்த இங்க உக்காந்து என்ன செய்ற ?


 சுரேஷ் வேர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்கிக்கொண்டு அமர்ந்து உள்ளான்

சுரேஷ்- உனக்குத்தாண்டா வெயிட் பண்ணேன், பாவம் சின்ன பைய பயப்படுவியே -னு .ஒன்னாவே ஏறுவோம் .

ஆனந்த்-நம்பிட்டேன் ,நல்ல சமாளிப்பு .

இருவரும் வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்கிக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டே செல்கின்றனர் .


7

ஆனந்த் - நல்லா கால ஊனி நட ண்ணே , திரட்டி மிதிச்சு சிலிப் ஆயி உழுக்கி கிடுச்சு னா போச்சு , எவன் தூக்கிட்டு போக உன்னைய .அதுக்குத்தான் உன்னைய வேண்டாம்னு சொன்னேன் நான் மட்டும் தனியாக போறேன்னு .


சுரேஷ் - நெகட்டிவா பேசாதடா இப்ப என்ன ஆயி போச்சு ? எல்லாம் சிவன் பார்த்துகிடுவாரு .


ஆனந்த்- கருப்பு சட்டை போட்டுகிட்டு பேசுற பேச்சா இது ? யூடியூப்ல ஃபுல்லா நாத்திகம் பேச வேண்டியதுவீடியோ அப்லோட் பண்ணிட்டு விழுந்து விழுந்து கும்பிட வேண்டியது .ஏன் எல்லாத்தையும் ஏமாத்தறீங்க ?

சுரேஷ்-எனக்கு என்னைக்குமே இயற்கை தாண்டா கடவுள் வீடியோல நீதான் என்னைய வற்புறுத்தி கூட்டிவந்து இருக்கேன்னு சொல்லி இருக்கேன் அப்படியே மெயின்டெயின் பண்ணிக் கோ .

ஆனந்த்-இது வேறயா?


சுரேஷ் - தன்ன நல்லவனா காட்டிக் கிட்றதுக்காக மனுஷன் பயன்படுத்துற முதல் ஆயுதம் பொய்.

ஆனந்த்- அப்ப நீ மனுஷன்-னு சொல்ற ?

( இருவரும் சிரிக்கிறார்கள் )


8

(இனி வருபவை ஷாட் பை ஷாட் கேமரா மற்றும் இசைக்கான வேலைகள் மான்டேஜ் )

ஆனந்த் ஓரிடத்தில் அமர்ந்து எதையோ எழுதுகிறான்

சுரேஷ் மரங்களையும் செடிகளையும் வீடியோ எடுக்கிறான்

இருவரும் இணைந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்

சுரேஷ் நடக்கமுடியாமல் ஆனந்தின் தோள்பட்டை மீது கையை வைத்து நடக்கிறான்

4 பாதங்களும் படிகளை கவ்விக் கொண்டு செல்கின்றன

ஓங்கி உயர்ந்த மரங்கள் இவர்களைப் பார்க்கின்றது

பாறைகளில் அமர்ந்து நெழித்து கொடுக்கின்றனர்

சுரேஷ் ஆனந்தை கைகொடுத்து தூக்குகிறான்

சுரேஷ் ஹெட்போனை ஆனந்த் பிடுங்குகிறான்

வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்குகிறது அவர்களுக்கு

இரு கைகளையும் நீட்டி மலையை ரசிக்கின்றனர் 

சுரேஷ் சட்டையை கழட்டி வியர்வையை பிழிகிறான்.

இருவரும் மாற்றி மாற்றி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்

பைப் கிடைக்கின்ற இடங்களில் நீர் அருந்துகின்றனர்.

வானத்தை நோக்கித் தாவி குதிக்கின்றனர் இருவரும்

குரங்கைப் பார்த்து பயப்படுகின்றனர் .

ஓடும் நீரில் முகத்தை கழுவ கின்றனர் .

( நல்ல இசையோடு.இருவரின் எதார்த்த செயல்பாடுகளோடு இயற்கையின் அழகையும் பயணத்தின் அருமையையும் காட்சிப் படுத்துகிறோம் )


இருவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர் ஆனந்த் பேச்சை நிப்பாட்டி பின் பக்கம் திரும்பி பார்க்கிறான் சுரேஸ் காலை பிடித்துக் கொண்டு குனிந்து உள்ளான் .


ஆனந்த் - என்ன ஆச்சு னே .

சுரேஸ் - கால பிரட்டி மிதிச்சுட்டேன் , ஊனி நடக்கவே முடியல

ஆனந்த்- இதுக்குத்தான் உன்னைய வேண்டாம்னு சொன்னேன் , இங்க ஓரத்தில் உட்கார்ந்து இருனே நான் மேல போய் சாமி பாத்துட்டு சீக்கிரம் வரேன் .

சுரேஷ் -ஏய் , என்னைய என்ன நெனச்ச ? உடம்புல 5 குண்டு வாங்குன பிறகும் வெரட்டி போய் சுட்டவன கொன்னவரு எங்க தாத்தா கார்கில் போர் ல .

ஆனந்த் -வீர வசனம் எல்லாம் பேசிக்கிட்டுருக்காதனே கால் வீங்கி போகும் உனக்கும் சிரமம் எனக்கும் செரமம் .

சுரேஷ் - சு**** நீ போடா நான் வரேன் .

(ஆனந்த் வேகமாக மேலே ஏறிச் செல்கிறான் , ஒரு பாறை மறைவிலிருந்து எட்டிப் பார்க்கிறான் , சுரேஷ் மெதுவாக ஏறி வருகிறான்)

ஆனந்த் தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு நோண்டி நோண்டி சுரேஷ் மலை ஏறுகிறான் 

ஆனந்த் - இந்த வீராப்பு ஒன்னும் குறைச்சல் இல்லை , ஒழுங்கா படியை பார்த்து நடக்க தெரியல 

10

சுரேஷ் வீடியோவில் பேசுகிறான் - காய்ஸ் இப்ப பாதி மலயை தாண்டியாச்சு இன்னும் கொஞ்சம் தூரம் தான் ,என்னோட கால் உழுக்கிச்சு ,ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஏறி கிட்டு இருக்கேன் .எல்லாம் உங்களுக்காகத்தான் .

சுரேஷ் ஆனந்த் மீது கையை போட்டு நடந்துகொண்டே வீடியோவில் பேசுகிறான் - காய்ஸ் வாழ்க்கை என்கிற மலை மேல நம்ம ஏறும்போது பல தடங்கல்கள் வரலாம் இந்த மாதிரி , இதுக்கு மேல முடியாது ஓரமா உட்காரு-னு ஆனந்த் மாதிரி பல பேர் சொல்லலாம் ,நமக்குள்ள நம்பிக்கையும் தீராத ஆர்வமும் இருக்கிறவரைக்கும் எதுவும் நம்மள நிறுத்த முடியாது. சற்று வேகமாக இருவரும் நடக்கின்றனர்.


ஒரு நீரோடையில் இருவரும் காலை நனைத்தவாறு அமர்ந்து உள்ளனர் .



11

ஆனந்த்-உனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை ?

சுரேஷ்- இருக்கு ஆனா வேற மாதிரி

ஆனந்த் - ம் . 

சுரேஷ்- சில விஷயங்கள சொல்லி புரிய வைக்க முடியாது .

ஆனந்த்- (காலை தண்ணீரில் உதறுகிறான் ) அண்ணே எனக்கும் கொஞ்சம் தெரியும் எல்லா மதங்களப் பத்தியும் படிச்சிருக்கேன் . நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கியே ?

சுரேஷ்-(சிரிக்கிறான்) மடலாய் விடலாய் கடலாய் திடலாய் உடலாய் உயிராய் உலகங்கள் ஆகியது .


ஆனந்த்- நல்லா இருக்கு பரஞ்ஜோதி மகான் சொன்னது தான . ஏன் குழப்பமாவே பேசிகிட்டு இருக்க ?

சுரேஷ்- அப்ப நீயும் எல்லாம் படிச்சிருக்க ?

ஆனந்த் - படிக்கலன்னு சொல்றியா எனக்கு ஒன்னும் தெரியாது னு சொல்றியா ?

சுரேஷ் - தம்பி, " அறிவது அறிவு உணர்வது ஞானம் " . எதையுமே முழுசா உணரனும் ஆனந்

ஆனந்த் - கெளம்புவோமா ?


12

இருவரும் பேசிக்கொள்ளாமல் நடந்து செல்கின்றனர் .


சுரேஷ்-இன்னும் எவ்ளோ நேரம்டா ஆகும் மேல போக ?

ஆனந்த்-பக்கத்துல தான் இந்தா வந்துருச்சு.

சுரேஷ் -ஏற ஆரம்பிச்சதுல இருந்து அத தானடா சொல்லிக்கிட்டே இருக்க, 

ஆனந்த்- வந்திரும் ணே

சுரேஸ்- இவ்ளோ சிரமபட்டு மேல போயி பாக்கனுமா ? இவ்ளோ ஜனம் ஏன் ஏறுது ? கொஞ்சம் பக்கத்துல இருந்திருக்கலாம் கோவில் .

ஆனந்த் - மேல போறதுக்கு நம்ம நினைச்சால்லாம் போக முடியாது ணே அவரு நினைக்கனும் னே " அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ".

சுரேஸ் - உருட்டு உருட்டு .


13 .

இவர்கள் போகும் வழியில் ஒருவன் அழுதுகொண்டு வருகிறான் , நேர் எதிரே வருவதால் பேசுகிறார்கள் .

ஆனந்த் - என்ன தம்பி என்ன ஆச்சு ?

தம்பி - கூட என் பாப்பாவ கூட்டிட்டு வந்தேன் எனக்கு முன்னாடி ஓடிப் போனாள் ,நானும் எல்லா இடத்திலும் தேடி பார்த்துட்டேன் காணோம் .

சுரேஷ் -வயசு எத்தனை பாப்பாவுக்கு ?

தம்பி - ரெண்டு படிக்கா 

சுரேஷ் - கிடைச்சுருவா நல்லா தேடிப் பாருங்க என் கூட வாங்க மேல போகலாம் .

தம்பி - இல்ல நீங்க போங்க வாரேன் .

ஆனந்த் - அட வாங்க ப்ரோ கண்டுபுடிச்சிடலாம் .

14 .

மூவரும் நடந்து செல்கின்றனர் .

ஆனந்த் - ப்ரோ நீங்க ஏதாவது செலிபிரிட்டியா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ?

தம்பி - (முழித்துக்கொண்டு இருவரையும் பார்க்கிறான் )

சுரேஷ் - தம்பி யாருன்னு தெரியலையா ? நம்ம சேனல்ல கூட பேசி இருக்கேன் நானு .

ஆனந்த் - ம் , சீரியல் ஆர்ட்டிஸ்ட் ப்ரோ ?

தம்பி - அதை விடுங்க .

(ஆனந்த் சுரேசை பார்க்கிறான் ஓரக்கண்ணாலே )

சுரேஷ் - ஒரு ஆன்லைன் கேம்ல ஒரு மிஷின் கத்திய வச்சு ஒரு பாட்டிய குத்த போயிருக்கான் , 

ஆனந்த் - ( தம்பியை பார்க்கிறான் )

சுரேஷ் - குத்தல போலீசுல புடிச்சு கொடுத்துட்டாங்க. நல்ல மனசு காரங்க கவுன்சிலிங் பண்ணி அனுப்பி விட்டாங்க .

தம்பி - அந்தக் கொடுமையை வெளியே சொல்லாதீங்க அண்ணே , கொரனோ டைம்ல வீட்ல சும்மா இருக்கோம்னு 10 ஆயிரத்துக்கு போன வாங்கி கெட்டு சீரழிஞ்சது தான் மிச்சம்.இந்த போனு சனியனால தான் எல்லாமே போச்சு

சுரேஷ் - எல்லாமே நம்ம பண்ணிட்டு ஏன் எதையோ குறை சொல்றோம் ? போனா இப்டி எல்லாம் பண்ண சொல்லுது ?

ஆனந்த் - ம்ச்ச் விடுனே ? ப்ரோ பாப்பா போட்டோ இருந்தா காட்டுங்க போன்ல ?

( போனை பார்க்கிறார்கள் இருவரும் )


15

ஆனந்த் - அண்ணே கீழே வரும்போது இந்த பாப்பாவ பார்த்தமாதிரி இருக்கேனே

சுரேஷ் - கீழே எங்கடா பார்த்தோம் ?

ஆனந்த் - தண்ணி குடிக்கும் போதுண்ணே

தம்பி - .நான் கீழே போய் தேடிப்பார்க்கிறேன் நீங்க மேல இருந்தா வச்சிருங்க புடிச்சு .

ஆனந்த் - கீழேதான் இருக்காள் சீக்கிரம் போ தம்பி.

16.

(இருவரும் நடந்து செல்கின்றனர் )

சுரேஷ் - என்னடா பயந்துட்டியா அவனை பார்த்து ?

ஆனந்த் - இல்ல என்ன ?

சுரேஷ் - அவன்ட பொய் சொல்லி ஓட விட்டுட்ட

ஆனந்த் - உண்மையாவே கீழே பார்த்தேன் பா

சுரேஷ் -கொலைகாரன் என்று தெரிந்த உடனே கழட்டி விட்டுட்ட, அவன் தான் எனக்கு முன்னாடி ஓடிப்போயிட்டா ன்னு சொல்றான் மேலே, நீ கீழே இருக்கா ன்னு சொல்ற 

ஆனந்த் - அண்ணே இவன் மேல தேடிப் போற மாதிரி அந்த பாப்பா கீழே தேடி போய் இருக்கும் .

சுரேஷ் - சிரிக்கிறான் .

17 .

( குகைக்குள் சொல்லும்போது ) நல்ல இசை ஓடுகிறது . 

( சாந்தமான மனதுடனும் முகத்துடனும் குகையில் சித்தரை வழிபடுகின்றனர் )

தியானம் செய்கின்றனர் , ஒரு பாறைமீது இருவரும் அமர்ந்து உள்ளனர் . 

ஆனந்த் - இப்படி இயற்கையோடு சேர்ந்து வாழ்றது தானே சொர்க்கம் .

சுரேஷ் -பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி .

ஆனந்த் - இதுக்காகத்தான் மாச மாசம் வாரேன்

சுரேஷ் - செத்தாரைப் போல திரி ஒரு பொல்லாப்பும் இல்லை

ஆனந்த் - என்ன ஆச்சு உனக்கு ..

சுரேஷ் - சும்மா .

ஆனந்த் - கம்முனு இருணே , கொஞ்ச நேரம் எல்லாம் கண்டு கழி .

சுரேஷ் - கண்டு உணர்வோம் .

( இருவரும் அமைதியாக மயான அமைதியை உணர்கின்றனர் )



( இரண்டு கோவிலையும் தரிசனம் செய்கின்றனர் - சித்தர் சிலைகளுக்கு முன் அமர்ந்து உள்ளனர் - கடலை சாப்பிட்டு கொண்டு கீழே இறங்குகின்றனர் - அடிக்கடி சுரேஷ் மொபைலைப் பிடித்து வீடியோ எடுக்கிறான் பேசுகிறான் - ஆனந்த் போட்டோ எடுக்கிறான் - இன்னும் பல )



18

( இருவரும் ஒரு படிக்கட்டில் அமர்ந்துள்ளனர் , சுரேஷ் போனை ஆனந்த் பார்க்கிறான் )

ஆனந்த் - என்ன ணே நீ எடுத்த வீடியோவையே காணும் எல்லாம் ஹைடு பண்ணிட்டியா ? 

சுரேஷ் - நடிக்காம சீக்கிரம் பார்த்துட்டு கொடு வீடியோ எடுக்கனும் ,

( ஆனந்த் போனை கொடுக்கிறான் )

சுரேஷ் - என்ன டா பன்ன வீடியோ எங்க

ஆனந்த் - என்ன ணே ?

( சுரேஷ் போனைப் பார்க்கிறான் அப்டியே கீழே போனை வைத்து விட்டு நேரே ஒரு மரத்திடம் சென்று குத்துகிறான் கைகள் வீங்க - நிறைய மூச்சு வாங்குகிறது - கண்கள் சிவக்க - " எடுத்த வீடியோ ஒன்ன கூட காணோம் டா " கலங்கிய கண்களுடன் .

ஆனந்த் - எப்டி

சுரேஷ் - இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஒன் டைம் ஆயிடுக்கு .

ஆனந்த் - சரி விடு 

சுரேஷ் - உண்ட பாக்க குடுத்தது தான் தப்பு அதான் இப்டி...

ஆனந்த் - ஹே ,.. என்னைய சொல்லாத

சுரேஷ் - ம்ச்ச் , எல்லாம் போச்சு (சோகத்துடன் ஆனந்த் அருகில் அமர்கிறான் )

ஆனந்த் - உன் தத்துவ பேச்சல்லாம் வெட்டி பந்தா -ண்ணே ஒனக்கு ஒரு பிரச்சனையினஉடனே இப்படி உட்கார்ந்துட்ட நொந்து போய்

சுரேஷ் - இல்லடா நீயே யோசிச்சு பாரு எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தோம் எல்லாம் ?

ஆனந்த் - இப்போ இருக்கிற மனநிலையோடு ஒரு வீடியோ எடுத்து போட்றுவோம் இப்போதைக்கு . 

சுரேஷ் - அடுத்த மாசம் வந்து திரும்ப வீடியோ எடுத்து போடுறோம் நீ கூட வர்ற சரியா ?








(காலம் - 1 PM) இடம்-மலைமீது


ஆனந்த்- நான் எடுக்கிறேன் நீ கொஞ்சம் தள்ளி நின்னு ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணு. (ஒரு மணி ஆச்சு சீக்கிரம் , கீழ போக வேணாமா ? ) 

சுரேஷ்-போடா எல்லாம் உன்னால தான் .

ஆனந்த் - சரி சரி .பேசு

சுரேஷ் - சாரி காய்ஸ் , இன்னைக்கு காலைல இருந்து எடுத்த அத்தனை புட்ஏச்சும் எப்படியே டெலிட் ஆயிடுச்சு.சாரி இன்னைக்கு ஃபர்ஸ்ட் நம்ம எங்க

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தம்பி ஓடி வருகிறான் , " சீக்கிரமா வாங்க கீழ " இருவரும் தம்பியை நெருங்கி வருகின்றனர் .

சுரேஷ் - என்னாச்சு தம்பி ?

ஆனந்த் - பாப்பா வ பாத்தீங்களா ?

தம்பி - பாப்பாவ உங்க தாத்தா தான் கண்டு பிடிச்சு இருக்கிறார் , கீழ கரும்பு ஜூஸ் கடையில விற்றுகாராம் , ஏதோ அவசரமா உங்க ரெண்டு பேத்தையும் பார்க்கணுமா ஒரு மணிக்குள்ள போய் கூட்டி வா ன்னு சொன்னாரு , மணி உன்ன தாண்டி போச்சு சீக்கிரம் வாங்க இங்கதான் ஒக்காந்து இருக்காரு , எல்லாரும் ஒண்ணா போயிரலாம் கீழே .

ஆனந்த் - எனக்கு ஏது ணே தாத்தா ? (சற்று ஆச்சிரிய முகத்துடன் )

( தம்பி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் - னு கையை பிடித்து கீழே இழுகிறான் ) மூவரும் நடந்து கீழே செல்கின்றனர் . 

 சுரேஸ் - என்ன தம்பி கொலப்றீங்க ? இவனுக்கு தாத்தாவே கிடையாது அப்படியே இருந்தாலும் ஒங்க பாப்பாவ எப்படி அவருக்கு தெரியும் ? 

தம்பி - அட ஆமால்ல இத நான் யோசிக்கவே இல்லை .

ஆனந்த்- என்ன மறுபடியும் ஏதாவது கேம் - ஆ ?

தம்பி - சத்தியமா இல்லைங்க அவரு பார்க்க அச்சு அசல் உங்களை மாதிரியே இருந்தாருங்க .

மூவரும் நடந்து ஓர் இடத்தை அடைகின்றனர் .

தம்பி - இங்க தாங்க இருந்தாரு ஆள காணோம் .

சுரேஷ் - என்னடா ஆனந்து நீ புயூச்சர் - ல இருந்து வந்துட்டு போயிட்டியா

ஆனந்த் - ஏன் இருக்கக்கூடாது ?


                 End '


"Don't try to understand it... Just try to Experience it " 


( இதில் உள்ளது வெறும் 30% மட்டுமே மீதி 70% நாம் எடுப்பதில் தான் உள்ளது . இந்தக் கதைகளும் மாறலாம் இந்த வசனங்களும் மாறலாம் இந்தக் காட்சிகள் மாறலாம் அனைத்தும் சூழ்நிலைகளை பொறுத்தது )

































Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்