மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம்

மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம் அனைவரையும் போலவே நானும் அறிந்திருந்தேன் , இந்த பெயருக்கு பின் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும் என துளியும் நினைத்தது கிடையாது. 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த "கான்சாகிப் முகம்மது யூசுப் கான் மருதநாயகம்" -ன் வரலாறு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சாத்தியம் இல்லாத சாதனைகள் படைத்த இவரின் பிறப்பு குறித்து பல தரப்பட்ட கருத்துக்களும் கதைகளும் நிலவுகிறது. மரணம் அடைந்து இரண்டு வாரங்களுக்குப்பின் இவரைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் எழுதிய கடிதத்தில், "மருதநாயகம்" பாரம்பரிய பாண்டிய வம்சாழியை சார்ந்தவர் என்றும், மற்றொரு கடிதத்தில் கிருஸ்த்தவ தாய்க்கும், இஸ்லாமிய தந்தைக்கும் பிறந்தவர் என்றும், 1990களில் செய்த ஆய்வில் மருதநாயகம் வேளாலர் குலத்தைச் சார்ந்தவர் என்றும், ஏழை இஸ்லாமிய தையல்கார தந்தைக்கு பிறந்தவர் என்றும், பல கதைகள் உலாவுகின்றன. பிறப்பா ஒரு மனிதனை தீர்மானிக்கிறது? செய்த செயல்தானே முக்கியம் ? இவரின் பிறப்பை விட்டு வரலாற்றை பார்த்தால் ஒரு சாகச வீரனின் துணிவை பெறலாம் நாம். போர் வீரர், ...