"சிப்பியின் வயிற்றில் முத்து" - நாவல் வாசிப்பு அனுபவம்

 

"சிப்பியின் வயிற்றில் முத்து" - நாவல் வாசிப்பு அனுபவம்








பல்வேறு புத்தகங்களை வாசித்தாலும் சிலவற்றைத்தான் பகிரவும் எழுதவும் தோன்றுகிறது. 1980 ஆம் ஆண்டு வங்காளத்தில் வெளியான இந்நாவல் நம் தமிழக மீனவர்களின் வாழ்வியலை தத்ரூபமாக வெளிகாட்டுகிறது. வங்காள மொழியில் ஒரு தமிழ் கதை.

போதிசத்வ சைத்ரேய 1950 ஆம் ஆண்டு தமிழக மீன்வளத்துறையில் பணியாற்றுகிறார், அக்காலக் கட்டத்தில் மீனவர்களின் வித்தியாசமான தொழில்முறையும், கடல் அலைக்கே சவால் விடும் அசாத்திய துணிச்சலை கண்டு வியக்கிறார்.

இரண்டு வருடம் மட்டுமே தமிழகத்தில் பணியாற்றிய இதன் ஆசிரியர், இந்த நாவலுக்காக இருபது வருடம் உழைத்துள்ளார். பத்து முறை மாற்றி திருத்தி எழுதியுள்ளார். இவரின் தேடலையும் உழைப்பையும் வணங்குகிறேன்.

இந்நாவலை மீனவர்களின் வாழ்வியல் என்று மட்டும் சொல்ல முடியாது, அப்போதைய தமிழக மக்களின் மனநிலையை உணர முடிகிறது. வாஞ்சி நாதனின் ஆஷ் கொலையை நேரில் கண்டது போல் உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் வந்த 'கடல்' படத்திற்கான கதை இந்நாவலின் சில பக்கங்களிலிருந்து உருவாகியிருக்க கூடும்.


மீனவர்களை பற்றி ஆழிசூழ் உலகு, செம்மீன் போன்ற நாவல்களை படித்திருந்தாலும் இந்நாவல் மனதை மயக்குகிறது.

சுதந்திரத்திருக்கு பிறகான தமிழகத்தின் பல இடங்களை விரிவாக விளக்குகிறார். [தூத்துகுடி, சாத்தூர், விருதுநகர்]

அப்போது உள்ள பல அரசியல் சூழல்களை பற்றி விவரிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது சில உண்மைகளை கண்டு.

அப்போதைய மீனவர்களின் மதிநுட்பம் மிரள வைக்கிறது. நம்மை வேறு மொழி எழுத்தாளர் நம் மீது ஆர்வம் கொண்டு தமிழ் மொழியை பேச கற்றுக்கொண்டு, பரதம், சிற்பக்கலை, போன்ற நம்முடைய பல கலைகளை விளக்கி கதையோடு இணைந்து வருவது சிறப்பளிக்கிறது. 

ஆறு விதமான மாறுபட்ட காதல் கதையும் மனதை கிரங்கடிகிறது.

கடலைப் பற்றிய பல அறிதான தகவல்களை இந்நாவல் தருகிறது . கடலின் மீது மனம் தீராக் காதல் கொள்கிறது .

நாவல் வெளியாகி பதினான்கு வருடத்திற்குப் பிறகு 1994-ல் தமிழில் மிகத்தெளிவாக மொழிபெயர்த்த எஸ். கிருஷ்ணமூர்த்தி போற்றுதலுக்குரியவர்.

'சிப்பியின் வய்ற்றில் முத்து' பல நல்ல அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு அளிக்கும்.


                - நந்தா






Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்