5-10-2-2024
இன்று தேநீர் அருந்தவில்லை , மிகவும் சிரமம் பட்டேன் .தலை வலித்தது . வியாபாரத்திற்கு சென்று வந்ததும் கடையில் இருந்தேன் , அப்பா வருண் ஐ பார்க்க சென்றார் . இன்று மின்தடை , மதியம் 2 மணிக்கு மின்சாரம் வந்தது , வளையம் போட சென்றேன் , இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க சென்று வந்தேன் , பெரியப்பாவிற்கு பிசியோ தெரப்பி செய்தேன் . ஊரில் இருந்து துரைக்கண்ணு பாட்டி வந்திருந்தால் அவளை அங்கு அழைத்து சென்று வந்தேன் .
இன்று மீன் கிடைத்தது , இரவு நன்றாக சாப்பிட்டேன் . சரக்கு எடுத்து வைத்தேன் .
இன்று ஒரு சம்பவம் நடந்தது , நந்தினி விருதுநகர் புத்தகக்கண்காட்சி க்கு சென்றிருந்தால் , அங்கிருந்து 'உனக்கு ஏதும் புத்தகம் வேணுமா டா என கைபேசியில் கேட்டால் , நான் " யுவான் சுவாங் பயண குறிப்புகள் " வாங்கி வர சொன்னேன் , எழுத்தாளர் பெயரும் அனுப்பி இருந்தேன் . இரவு ஜெயமோகன் தளத்தில் அவருக்கு இரங்கல் கடிதம் இருந்தது . எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது .
என்னை அறியாமலே நான் இன்று சொன்ன எழுத்தாளர் 03-10-24 ல் மரணித்திருக்கிறார் அந்த செய்தி அன்றிரவே எனக்கு தெரிந்திருக்கிறது , ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய புத்தகங்களை பற்றி கடந்த மூன்று நாட்களாக நான் சிந்தித்து கொண்டிருந்தேன் .
அவர் இறப்புக்கு பிறகு சிந்தித்து பார்த்தால் , எவ்வளவோ எழுத்தாளர்களும் புத்தகங்களும் இருக்கையில் நான் ஏன் இவர் பெயரையும் இவர் புத்தகத்தையும் வாங்கி வர சொன்னேன் ? , இவரின் மூன்று புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன் , மூன்றுக்குமே கட்டுரை எழுதியிருக்கிறேன் , இந்த தளத்திலேயே .
இவரின் கைபேசிக்கு இவரின் புத்தகங்கள் வாசித்து முடிக்கவும் அழைத்திருக்கிறேன் மூன்று முறை என் அழைப்பை அவர் ஏற்க்கவில்லை . , இந்த சம்பவம் என்னை ஆச்சரியப்படுத்தியது மிகவும் . இம்மாதிரியான சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்துள்ளன அது என் நெருக்கமானவர்களுக்கு தெரியும் . இரவு முழுவதும் இதே சிந்தனை ஓடியது மனதில் .
அவரின் ஒவ்வொரு படைப்பும் நம் மனதின் ஆழத்தில் வேர் ஊன்றகூடியவை . அவரின் படைப்புகள் வழியாக அவர் என்றும் வாழ்வார் .
https://www.blogger.com/blog/post/edit/6717219253476655499/2760569805473428957
https://www.blogger.com/blog/post/edit/6717219253476655499/2183649752632041154
https://www.blogger.com/blog/post/edit/6717219253476655499/6229965103999249274
Comments
Post a Comment