13-09-2024

  இன்று காலையில் வியாபாரதிற்கு கிளம்பும் போது வாகனக் கோளாறல் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது.


    வெயில் அதிகமாக இருந்தது, கண்கள் எரிகிறது.

     இன்று இயக்குனர் 'டெராண்டினோ ' வின் " PULP FICTION " படம் பார்த்தேன் சிறப்பாக இருந்தது.




  1992 -ல் எடுத்தது போல் இல்லை,.. மிகத்துல்லியமாக இருந்தது.


டெராண்டினோ படம் என்று தெரியாமலேயே சில படங்கள் சிறு வயதில் பார்த்துள்ளேன்,.. ' Once upon a time in Hollywood ', Diango,   

இவரின் படங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமானவவை, ஏன் எனில் நான் வன்முறை மிக்கவன் என என் அருகில் இருப்பவர்களுக்கு தெரியும்.


வன்முறையை ரசிக்கும் கலையாக, அழகியல் நோக்கொடு எடுக்கும் நுட்பத்தை இவரின் படங்கள் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

இவரின் தாக்கம் என் அனைத்து படங்களிலும் இருக்கும். என்னிடம் என் வீட்டிலும் சில நண்பர்களும் அடிக்கடி கூறும் வரி ' இரத்தம் இல்லாமல் மரணம் இல்லாமல் படம் எடு ' என்பதுதான்.

Tarantino ஒரு குரு எனக்கு.

இரவு ' PULP FICTION ' தாக்கத்திலேயே 2 KM நடந்து சென்று வாகனத்தை பழுது பார்த்து வாங்கி வந்தேன்.

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025