17-09-2024
மரங்களின் அசைவை கவனித்தேன், சில இலைகள் மென்மையாக இசைக்கின்றன. சில இலைகள் ஏதோ தகவல்களை பரிமாறி கொள்கின்றன.
அவை என்னதான் செய்கின்றன? பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அதன் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?
மனிதர்களை போலே உறவுகளும் உணர்வுகளும் கொண்டு அன்பின் வெளிச்சத்தை ருசிக்கின்றனவா ?
கிளை அசைவதால் காற்று உண்டாகிறதா இல்லை காற்றினால் கிளை அசைகின்றதா?
மரமே நீ பேசும் மொழியை எனக்கும் கற்று தருவாயா,? உன்னைப்பற்றி காவியம் படைக்கத்தான் கேட்கிறேன்.
' ஏ மரமே ' என ஒருபோதும் எந்த மனிதனையும் திட்ட மாட்டேன் இனி நீ இந்த உலகின் மூத்த குடி அல்லவா ?
என் வீட்டின் வாசலில் உள்ள கதவிடம் கேட்க்கிறேன் இதற்காகவா நீ பிறந்தாய், உன் மீதி உறுப்புகள் எங்கே இருக்கும் தெரியுமா ?
நிறைய எழுத தோன்றுகிறது மரம் பற்றி, கண் உறுத்துகிறது.
96 இயக்குனரின் அடுத்த படைப்பான ' மெய்யழகன் ' படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Comments
Post a Comment