21-09-2024
மன வலிமை உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். மனம் ஏனோ நிகர் நிலையில் இல்லாமல் மயக்கநிலையில் மிதக்கிறது.
உடலை என் வசப்படுத்த வேண்டும்.
வேட்டை பெருமாள் கோவில் சென்று வந்தோம்.
'தங்கலான் ' படம் பார்த்தேன், நன்றாக இருந்தது கதை.
விக்ரம் அவர்களின் நடிப்பு மிக கட்சிதமாக இருந்தது, புதுமையாக.
இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நன்றாக திரைக்கதையும் இயக்கமும் இருந்திருக்கலாம்.
இசையும் படத்திற்கு ஏற்றார்போல் ஒட்டவில்லை.
ஆழ்ந்த தாக்கத்தையும் பாதிப்பையும் தரவில்லை எனக்கு.
'ஆயிரத்தில் ஒருவன் ' திரைப்படம் உருவாக்கிய எல்லையை தொடுவது இயலாத காரியம்,.. செல்வராகவனால் கூட இயலாது.
தங்கலான் குழுவிற்கு நன்றி, இப்படி ஒரு முயற்சி எடுத்து ஒரு படைப்பை தந்ததிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
'அப்போகழிட்ப்டோ ' மாதிரி எதிர்பார்த்தது என் தவறு.
மக்கள் மென்னேற பல இன்னல்களை தகர்க்க வேண்டும் என்பதை பல்வேறு கிளைகள் மூலம் மறைமுகமாக கூறியிருக்கிறார்கள்.
இயக்குனர் ரஞ்சித் ன் அனைத்து படைப்புகளும் எனக்கு மிக பிடித்தமானவை,. அந்த வரிசையில் தங்கலான் ம் இடம்பெறும்.
'மெட்ராஸ்' மற்றும் 'சர்பட்டா பரம்பரை ' அவரின் மிக சிறந்த படைப்புகள்,.. அவற்றை விட சிறந்த படைப்பை அவர் தரவேண்டும்.

Comments
Post a Comment