25-09-2024
எதிர்பாராத சிரமங்களும் துன்பங்களும் நம்மை செதுக்கும், நாம் எவ்வளவு நிதானமானவர்கள் என்பதை நமக்கே காட்டும்.
இயக்குனர் பிரேம் அவர்களின் ஒரு நேர்காணல் கண்டேன், சினிமா சார்ந்த சில நுட்பங்களை கற்றுக்கொண்டேன்.
இன்று கடையில் ஒரு பெண்மணிக்கு 5 ரூபாய் அதிகமாக வாங்கியதிற்கு அந்த பெண் கூறிய வார்த்தைகள் என்னை வேதனை படுத்தியது, ' படித்தும் அறிவு இல்லை, கணக்கு பார்க்க தெரியவில்லை ' என வைதுக்கொண்டே தெருவில் நடந்து சென்றது.
இன்று முழுவதும் கடையில் இருந்தேன், இன்று மூன்று மரணங்கள். அதில் ஒன்று என்னை வியக்க வைத்தது, மரணதை ஏற்றுக்கொண்ட மனிதர்.
பெரியப்பா விற்கு உடல்நிலை சரிஇல்லாதது மிக வருத்தமாக உள்ளது.

Comments
Post a Comment