26-09-2024
ஒரு கடைக்காரர் சொன்னார் 'ஆஸ்பத்திரி செலவும் போலீஸ் கேஸ் செலவும் வரவே கூடாது வந்தால் அவ்வளவு தான்' ன்னு,.
பெரியப்பா வை இப்படி பார்ப்பது மனம் சங்கட்டமாக இருக்கிறது.
சுகர் பிரசர் க்கு அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர் ல் ஒரு சித்தமருத்துவரை பார்க்க சென்றார்.
உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது, உடலை நேசிக்க வேண்டும் முதலில்.
நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அப்பா வுடன் இருசக்கர வாகனத்தில் சென்றேன். கொஞ்சம் பேசினோம் .
அனு வை பள்ளியில் இருந்து வீட்டிற்கு கூட்டிவந்தேன்.
நீலனுக்கு காய்ச்சல், கொஞ்சம் சோர்வாக இருக்கிறான்.
கணேஷ் மாமாவிற்கு பௌத்ரம் வலி அதிகமாக உள்ளது.
Comments
Post a Comment