4-09-2024
இன்று அறைக்குள்ளேயே உடற்பயிற்சி செய்தேன் தூக்ககலக்கம் அதிகமாக இருந்தது.
காலையில் பால் வர தாமதம் ஆனது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
டீ அருந்தாமல் சென்றுவிட்டேன், இந்நாள் முழுவதும் தலை வலித்தது.
ஆடுஜீவீதம் படம் பார்த்து முடித்தேன், கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது, மகாலட்சுமி க்கு புடித்திருந்தது இருந்தும் பயம்.
சில காட்சிகள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே உணர முடிந்தது ஆச்சரியம்.
ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன், அறிந்து கொண்டேன்.
அஜிதன் சகோ விடம் வாட்ஸாப்ப் ல் பேசினேன்.
இன்று முதல் குழாய் கடை மூன்று நாட்கள் விடுமுறை இதை பயன் படுத்தி சிவா புத்தகத்தை முடிக்க வேண்டும் 600 பக்கங்களுக்கு மேல் உள்ளது. பார்ப்போம்.
நந்தினி யிடம் எலான் மஸ்க் பற்றி பேசினேன், அவளுக்கு அவரை தெரியாதது எனக்கு வியப்பாக இருந்தது.
மாலையில் the garden of words படம் பார்த்தேன்.
மகிட்டோ சிங்காய் படங்கள் மட்டுமே பார்த்தால் போதும். அது தனி உலகம். சொல்வதற்கு வார்த்தைகளை வளர்த்து தனியாக எழுதுகிறேன் அதை பற்றி,.
சரக்கு எடுத்து வைத்தேன் கோபுலாபறம் டீ கடை சரக்கு சொன்னாங்க.
45 minutes பார்த்த அனிமே படம் உடல் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.
மாலையில் நடை பயிற்சி செய்தேன், நாளை காலை எப்படியாவது ரன்னிங் செல்ல வேண்டும்.


Comments
Post a Comment