5-09-2024
மோகட்டோ சிங்காய் ன் காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது வெளி வரமுடியவில்லை,. Suzume ன் பாடல் ஒன்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது, காதில் கேட்க்கிறது.
https://youtu.be/Xs0Lxif1u9E?si=XvJKskFMLu377gOb
இன்று கடையில் நின்றுக்கொண்டே வாசித்தேன், 100 பக்கம் தாண்டி வாசித்தேன்,. நீலனை வைத்து இருந்தேன் வெளியில்.
" வாயுபுத்திரர் வாக்கு " புத்தகத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும்.இப்புத்தகத்தில் சில வித்தியாசமான தத்துவங்களை கற்றுக்கொண்டேன், தவளை தத்துவமும், பரிணாமம் பற்றிய ஒன்றும்.
வெண்முரசை இடை நிறுத்தி விட்டு சிவா முழுதொகுதி படிக்க வந்தது நீண்ட நாட்களை தின்றுவிட்டது வருத்தம்.
இன்று raj b setty ன் ஒரு கன்னட படம் பார்த்தேன், இவரின் பல படங்கள் பார்த்துள்ளேன், நல்ல நடிகர்.
சில பாடல்கள் கேட்டேன்,இதமாக இருந்தது.சில நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்க இயலவில்லை.
இன்னும் கொஞ்சம் பக்குவம் அடையவேண்டும்.

Comments
Post a Comment