03-10-2024
Projector பழுது நீங்கி வந்து விட்டது, அதை செயல் படுத்தி பார்க்க நேரம் அமையவில்லை.
வியாபாரம் பரவாயில்லை, கடன் கொடுப்பது வெறுக்க வைக்கிறது.
கடையில் இருந்தேன், சில வாடிக்கையாளர்களை புரிந்துகொள்வது மிக கடினமாக உள்ளது.
காலையில் தாமதமாக எழுந்தேன். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
திருநெல்வேலி ரோஸ்மேரி மருத்துவமனைக்கு சென்று வந்தோம் மலர் அத்தே விற்கு காட்ட.
மூளை, இதயம், நரம்பு என 5 பிரிவுகளில் மருத்துவர்கள் தனி தனியாக,
மருத்துவமனையில் அமர்ந்தவர்களில் கையில் தொலைபேசி இல்லாமல் அமர்ந்தவர்களில் என்னையும் சேர்த்து 3 பேர் மட்டுமே, அனைவரையும் அமைதியாக கவனித்தேன். நகைசுவையாக இருந்தது.
அங்கு அமர்ந்தவர்களில் கால்பேசி நோயாளிகள் கைபேசியால் நோய்வாய் பட்டு வந்திருப்பார்கள் அது அவர்களுக்கே தெரியாது.
முதல் முறையாக ரவா தோசை சாப்பிட்டேன்.
Comments
Post a Comment