1-10-2024

         எப்போதும் ஒரே மனநிலையில் அனைவரும் இருக்கமாட்டார்கள், அதை வெளிப்படுத்தவும் தயங்குவார்கள்.

         சில பிரச்சனைகளை அப்படியே விட்டு விடுவது நல்லது.

          இக்கட்டான சூழலில் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது.


               இன்று வியாபாரம் பரவாயில்லை. வெயில் கொஞ்சம் உதவி செய்தது.


             275 வளையம் போட்டேன், மெஷினை சரி செய்தேன்.

           கடையில் இருந்தேன், கொய்யா காயை சுவைத்து சாப்பிட்டேன்.


       நீலனை வைத்து இருந்தேன், மகாலட்சுமி யோடு சண்டை போட்டேன் கொஞ்சம்.

        பட்டாசு கடைக்கு விளம்பரம் செய்தேன், என்னால் சிலர் வாங்குவார்கள் என நம்புகிறேன்.


            சதுரகிரி செல்லவேண்டும் சீக்கிரம்.

   மர நாற்காலி யை பெரியப்பாவிற்கு கொண்டு சென்றேன்.


வளையம் போடும் போது நிறைய பாடல்கள் கேட்டேன்.


RRR படத்தின் பாடல்களை ஏனோ திரும்ப திரும்ப கேட்டேன்.


சிலரிடம் பேசி அவமானப்பட்டேன், இன்னும் நிறைய அனுபவம் வேண்டும், அறிந்தும் பிழை செய்கிறேன். செயலில் தீவீரம் வேண்டும்.


  சில கைபேசி அழைப்புகளை தவிர்த்தேன், வாசிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும் அதுகமாக.

சில சிந்தனைகளை ஆழமாக செய்தேன்.

Comments

Popular posts from this blog

விபத்துக்கள்

5-10-2-2024

முதல் சிறுகதை - இளங்காவல்