2-10-2024

       மழையில் நனைந்து கொண்டே வியாபாரதிற்கு சென்றேன்.

        "நீ கிளம்பி போ  நிக்காத எல்லாம் சரியா போகும் " என என் அம்மா கூறியது மழைக்காக மட்டும் அல்ல வேறு ஏதோ என் வாழ்க்கையை முன் நகர்த்த இயற்கை கூறிய ஒற்றை வரி என புரிந்து கொண்டேன், அதுவே ஒன்றை நிகழ்த்தும் என நம்புகிறேன்.

        பட்டாசு கடைக்கு சென்று இருந்தேன் அனைவரோடும்.

          நீலனை கவனித்தேன். "You tube"ல் சில நேர்காணலை பார்த்தேன்.அதையும் இனி தவிர்க்க விரும்புகிறேன்.

              பல நேரங்களில் சும்மா இருப்பதும் நன்மையே. அதிகமாய் பேசுவதை விட அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது.

            பாட்டியை சந்தித்தேன், சில அறிவுரைகளை பெற்றுக்கொண்டேன்.

              சொந்த பந்தங்கள் எப்போதும் இதுபோல் நீளுமா என ஏக்கம் கொள்கிறேன்.


            


Comments

Popular posts from this blog

விபத்துக்கள்

5-10-2-2024

முதல் சிறுகதை - இளங்காவல்