09-09-2025

        ஜெமோகன் 

 என்னுடைய குருவை சந்திக்க செல்கிறேன் விரைவில் ,எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் ,ஒரு வாரமாக இதே யோசனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது . தனியாக செல்ல இருக்கிறேன் என்ன செய்ய ஏது செய்ய என ஒரே குழப்பம் . பல வருட கனவு நினைவாகுமா ? 


    என் வாழ்வின் மிக முக்கியமான நபர் , இவரை அறிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் என் வாழ்வு இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது , எனக்குள் ஏற்படுத்திய அலைகள் இன்னும் நிற்காமல் அடிக்கிறது ஒவ்வொருமுறையும் புதியதாக , அவரை எனக்கு அறிமுக படுத்தியது எழுத்தாளர் பாலகுமாரன்.


   நான் பல எழுத்தாளரர்களை கடந்து வந்து விட்டேன் , இவரை தொட்ட நாள் முதல் இன்று வரை என்னால் விட்டு விலக இயலவில்லை , ஜெயமோகன் என்ற பெயரை நினைக்காத நேரங்களே இல்லை என் ஒவ்வொரு நாளிலும் , சில முறை மட்டுமே மெயிலில் பேசியுள்ளேன் அனைத்தையும் திரும்ப திரும்ப எடுத்து பார்ப்பேன் . 


        நிறைய யோசிக்கிறேன் ஆனால் வார்த்தைகளாக வர மறுக்கிறது . நடக்கட்டும் பார்க்கலாம் . 13-09-2025 அன்று சந்திக்க இருக்கிறேன் . பதட்டமாக உள்ளது . 

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025