09-12-2025
சிவகாசி TPS FIRE ஆபீஸ் சென்றோம் ஆரியன் நான் கணேஷ் மாமா மூவரும் , பயணம் இனிதாக அமைந்தது , இன்று கம்பனியில் அம்மாவிற்கு வேலை அதிகம் , நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் , நீலன் உடல்நிலை சிலநாட்களாக சரி இல்லை அது கவலையாக உள்ளது அனைவருக்கும் .
இனி தினமும் எழுத வேண்டும் , ஓம் நமச்சிவாய , ஜெயமோகன் என் கடிதத்திற்கு பதில் அனுப்பாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது , இன்னும் அதிமாக வாசிக்க வேண்டும் , புதியன எழுத வேண்டும் , பார்க்கலாம் . ஒவ்வொரு நாளையும் சரியாக பயன்படுத்த வேண்டும் .
எக்கச்சக்க எண்ணங்கள் , ஏதேதோ குரல்கள் காதில் ஒலிக்கின்றன , சில சமயம் அந்த இயந்திரங்களின் இறைச்சல் , நிதானம் அற்று நிலையில்லா வார்த்தைகளோடு சுற்றி திகழ்கிறேன் , எவரிடமும் பேச பயம் , ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து பேசுகிறேன் மிக குறைவாக , என்னை நான் மேம்படுத்தவேண்டும் .
.
கண்மாய் நிறைய நீர் உள்ளது மகிழ்ச்சி ஆனால் காலைக்கடன் , மாலைக்கடன் , முடிப்பதுதான் கொஞ்சம் சிரமமாக உள்ளது .
\
"நாம் ஒன்று செய்ய வேறு ஒன்று நடக்கிறது , அவரவர் புரிதலுக்கு ஏற்றார் போல் அனைத்தும் மாறிவிடுகின்றன அவரவர் எண்ணம்போல் "
முந்தாநாள் கிணற்றுக்கு சென்றோம் என்னை நானே உணர்வது அங்குதான் , தினமும் கிணற்றில் குளிக்க ஆசைப்படுகிறேன் நேரம் ஒதுக்க வேண்டும் , பார்க்கலாம் .
Comments
Post a Comment