இன்று தேநீர் அருந்தவில்லை , மிகவும் சிரமம் பட்டேன் .தலை வலித்தது . வியாபாரத்திற்கு சென்று வந்ததும் கடையில் இருந்தேன் , அப்பா வருண் ஐ பார்க்க சென்றார் . இன்று மின்தடை , மதியம் 2 மணிக்கு மின்சாரம் வந்தது , வளையம் போட சென்றேன் , இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க சென்று வந்தேன் , பெரியப்பாவிற்கு பிசியோ தெரப்பி செய்தேன் . ஊரில் இருந்து துரைக்கண்ணு பாட்டி வந்திருந்தால் அவளை அங்கு அழைத்து சென்று வந்தேன் . இன்று மீன் கிடைத்தது , இரவு நன்றாக சாப்பிட்டேன் . சரக்கு எடுத்து வைத்தேன் . இன்று ஒரு சம்பவம் நடந்தது , நந்தினி விருதுநகர் புத்தகக்கண்காட்சி க்கு சென்றிருந்தால் , அங்கிருந்து 'உனக்கு ஏதும் புத்தகம் வேணுமா டா என கைபேசியில் கேட்டால் , நான் " யுவான் சுவாங் பயண குறிப்புகள் " வாங்கி வர சொன்னேன் , எழுத்தாளர் பெயரும் அனுப்பி இருந்தேன் . இரவு ஜெயமோகன் தளத்தில் அவருக்கு இரங்கல் கடித...
" ROAD " என நான் ஒரு குறும்படத்தை கல்லூரியில் இயக்கினேன். அதை இயக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தேன். வழக்கம் போல என் நண்பர்களையே நடிக்க வைத்துஇருந்தேன். https://youtu.be/C5J1mB-QXGU?si=YrDp0LkAu9N0OFlZ சபரி, சங்கிலி, சுந்தர், துரைபாண்டி, என் நண்பர்கள் என்பதாளோ என்னவோ மிக கவனமாக எளிமையாக எடுத்தேன், சாலை விபத்தை பற்றி. ஒரு ஆசிரியர் அந்த படம் பார்த்து' இது ஒரு படமா 'என சிரித்தார். சாலை விபத்து போன்ற கொடுமையான ஒன்றை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மனநிலை. பல விபத்துக்களை என் நுண்நுணார்வால் தப்பித்துள்ளேன், அதை என்னாலேயே நம்பமுடியவில்லை மற்றவர்கள் எப்படி,.... வாகனம் திடீரென சுண்டி இழுக்க வேகத்தை குறைக்கிறேன் என்னை தாண்டி சென்ற ஒரு வாகனம் ஆட்டோ க்கடியில் மாட்டி விட்டது, வாகனம் நம்மை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்கிறதோ என தோன்றுகிறது. நேற்று என் நண்பன் ஒருவனுக்கு விபத்து ஏற்பட்டது, பெரிதாக ஒன்றும் இல்லை அவனுக்கு, மருத்துவமனை சென்று TT ஊசி போட்டு வரும் வழியில்,.. விபத்து நடந்த இடத்தில் விசாரித்து விட்டு CCTV ...
நாளை நமதே அதிகாலையில் விரைவில் எழுந்து உடற்பயிற்சி செய்ய விழைகிறேன் சில மாதங்களாக என் சோம்பேறி தனத்தால் சோம்பிப்போய் முட்டாளாக உள்ளேன் , என்னை மீண்டும் செதுக்க வேண்டும் , என்னுடைய நான் வெளிவரவேண்டும் , ஒவ்வொரு நாளும் என்னை நான் மேம்படுத்த வேண்டும் , என் நேரத்தையும் உழைப்பையும் சரியான பாதையில் செலுத்த விழைகிறேன் , அதற்கு இயற்க்கை வழிகாட்ட வேண்டும் , காலம் போல் மிக வேகமான ஒன்று வேறு இல்லை என சில நாட்களாக புரிந்துகொண்டேன் . கிடைக்கின்ற நேரத்தை உபயோகமாக பயன்படுத்த ஆசை படுகிறேன் , நாளை சில திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறேன் , அதை முழுமையாக முடிக்க வேண்டும் , பார்ப்போம் .
Comments
Post a Comment