மெய்ப்பொருள் அனுபவம்
'இருள்' என்ற மலையாள படத்தின் ஒரு நிகழ்வை கொண்டு , 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற படத்தை இயக்கினேன்.
இப்படத்தில் எனக்கு மிக அணுக்கமான கௌதம், மணிகண்டன், கவி, அஸ்வத், நால்வரும் நடித்திருந்தனர்.
இப்படம் 'BEHEINDWOODS' ல் ஒரு போட்டிக்காக எடுக்க பட்டது. எதிர் பாராவிதமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதற்க்காக இருபத்தி இரண்டு நாட்கள் ஒரே ஆடையுடன் நால்வரும் திரிந்தனர். அதற்காக அவரவர் இல்லங்களில் அவர்கள் வாங்கிய திட்டுக்கள் ஏராளம், என்னிடமும் கேட்டார்கள்
' டெய்லி கம்மாக்குள்ள போயீ என்னடா செயிரீங்க நந்தா, கெளதம் நைட் தூக்கத்துல என்னென்னமோ கத்துறான்னு 'அவன் அம்மா.
'மணி ய நீயே வச்சுக்கோயா நந்தா' னு அவன் அம்மா.
நான் மிக அதிகமாக தொந்தரவு செய்தது இவர்கள் நால்வரை தான், கொஞ்சம் கூட முகம் கோணாமல் சிரித்து கொண்டே அனைத்தையும் எதிர்கொண்டனர்.
கொரானாவிற்கு மிக நன்றி, அந்த நேரங்களில் மிக தீவீரமாக செயல் புரிந்தவர்களில் நானும் ஒருவன், ஒவ்வொரு நாளையும் மிகவும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டேன்.
என் படங்களில் அதிக நபர்கள் என்னிடம் சிலாகித்து பேசியது இப்படத்தை தான், ஒரு மணி நேர படத்தை பொறுமையாக பார்த்து ஒவ்வொன்றையும் எடுத்து கூறியவர்களை பார்த்து மகிழ்ந்தேன்.
'யார் இந்த கொக்கு மண்டை ' என பல நண்பர்கள் கேட்டனர்.
நால்வரும் இப்படத்திற்காக கொடுத்த நேரமும் ஆற்றலும் அளப்பறியது. அவர்களை என்றும் மறவேன்.
என் கோபத்தை என் இம்சையை பொருட்படுத்தாமல் என் மீது பேரன்பை மட்டுமே பொழிந்த அனைவருக்கும் நன்றிகடன் பட்டுள்ளேன்.
படப்பிட்டிப்பின் போது ஒரு கோபத்தில் நால்வரையும் கண்டபடி பேசிவிட்டு சென்றபோது, கௌதம் அனுப்பிய ஒரு வரி எனக்கு கண்ணீரை வரவலைத்தது. அந்த தூய அன்பை என்றும் நினைத்திருப்பேன்.
' எப்பவும் என்னையவே ஏன் கொல்ற ' னு மணி கேட்க்கும் கேள்விக்கு பதில் அவன் நடித்த படங்களை பார்த்தால் தெரியும்.
' எனக்கு நடிக்கவே தெரியாது ணே என்னய போயீ ஓவர் ஆக்ட்டிங் னு வைற என்னய விற்றுனே 'என கதறும் அஸ்வத் ஐ தான் நல்லா நடிச்சிருக்கான் ன்னு நிறைய பேரு சொன்னாங்க.
நான் மிகவும் நேசித்தவர்களில் பலர் என் அருகில் இல்லை வெகு தூரத்தில், அதில் இவர்கள் நால்வரும் அடங்கும்,. அவர்கள் விடுமுறையில் வரும் பொழுது சிறு புன்னகையுடனும், முதுகிலும் தோல்பட்டயிலும் குத்து வாங்கி வலியில் தேய்த்துக்கொண்டே ஒரு சில வரிகளில் கடந்து செல்கிறார்கள்.
நேற்று ஒரு தம்பி என்னிடம் பேசினான் இவ்வாறு ' அண்ணே ஊர் ரொம்ப மாறி போச்சு ணே, ஓடி விளையாடுற பயகளே இல்ல, சிறுசு ல இருந்து பெருசு வரைக்கும் மூஞ்ச பார்த்து பேச ஆளில்லை கைல இருக்குற போன தான் பாக்குங்க, நான் சின்ன வயசுல விளையாண்ட விளையாட்டுக்கள் நம்ம பழைய ஊரணி எங்க பழைய வீடு இன்னும் பல, உன்னோட படங்கள் ல்ல தான் எல்லாமே பார்ப்பேன், ஏன் இப்போக்குள்ள நீ படமே எடுக்கல ' இப்படி தொடர்ந்தது அவன் பேச்சு. எனக்குள் எழுந்த எண்ணம், நான் படித்த கல்லூரி நான் படித்த போது இருந்தது போல் இன்று இருக்குமா என தெரியவில்லை ஆனால் அதன் பல நினைவுகளும் காட்சிகளும், என்னோடு பயணித்த அனைவருக்கும் ஏகாந்தமாய் நினைவில் நிற்க என் படங்கள் துணை நிற்கும் என.
சில நாட்களுக்கு முன்பு இருவரோடு ஓர் இரவில் சித்தால் வேலை செய்தேன், அந்த குளிரில் நிறைய பேசிக்கொண்டே இருந்தேன், வேலை முடியும் தருவாயில் ஒருவன் சொன்னான் " செல்வம் இன்னும் இரண்டு நாள் நந்தா அண்ணே கூட இருந்தோம் நம்மள புத்தரா மாத்திருவான் இதெல்லாம் நமக்கு ஒத்துவராது " என்று,.
அந்த இரவு சிந்தித்தேன், என்னோடு பயணித்தவர்கள் பயணித்துகொண்டிருப்பவர்கள் அனைவரையும், எழுத வேண்டும் என்று.
Comments
Post a Comment