Posts

Showing posts from October, 2024

5-10-2-2024

Image
                               இன்று தேநீர் அருந்தவில்லை , மிகவும் சிரமம்  பட்டேன் .தலை வலித்தது . வியாபாரத்திற்கு சென்று வந்ததும் கடையில் இருந்தேன் , அப்பா வருண் ஐ பார்க்க சென்றார் . இன்று மின்தடை ,  மதியம் 2 மணிக்கு  மின்சாரம் வந்தது ,  வளையம் போட சென்றேன் , இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க சென்று வந்தேன் , பெரியப்பாவிற்கு பிசியோ தெரப்பி செய்தேன் . ஊரில் இருந்து துரைக்கண்ணு பாட்டி வந்திருந்தால் அவளை அங்கு அழைத்து சென்று வந்தேன் .                       இன்று மீன் கிடைத்தது , இரவு நன்றாக சாப்பிட்டேன்  . சரக்கு எடுத்து வைத்தேன் .   இன்று ஒரு சம்பவம் நடந்தது , நந்தினி விருதுநகர் புத்தகக்கண்காட்சி க்கு சென்றிருந்தால் , அங்கிருந்து 'உனக்கு ஏதும் புத்தகம் வேணுமா டா என கைபேசியில் கேட்டால் , நான் " யுவான் சுவாங் பயண குறிப்புகள் " வாங்கி வர சொன்னேன் , எழுத்தாளர் பெயரும் அனுப்பி இருந்தேன் . இரவு ஜெயமோகன் தளத்தில் அவருக்கு இரங்கல் கடித...

4-10-2024

               இன்று காலை முதல் புத்துணர்வோடு இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சில கடைக்காரர்கள் நடந்து கொண்டனர். வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. சில பொருள்கள் வந்து சென்றன.    வளையம் போட்டேன் 375. பெரியப்பாவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றேன்.    பாடல்கள் கேட்டேன் 

03-10-2024

        Projector பழுது நீங்கி வந்து விட்டது, அதை செயல் படுத்தி பார்க்க நேரம் அமையவில்லை.       வியாபாரம் பரவாயில்லை, கடன் கொடுப்பது வெறுக்க வைக்கிறது.      கடையில் இருந்தேன், சில வாடிக்கையாளர்களை புரிந்துகொள்வது மிக கடினமாக உள்ளது.       காலையில் தாமதமாக எழுந்தேன். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.        திருநெல்வேலி ரோஸ்மேரி மருத்துவமனைக்கு சென்று வந்தோம் மலர் அத்தே விற்கு காட்ட.    மூளை, இதயம், நரம்பு என 5 பிரிவுகளில் மருத்துவர்கள் தனி தனியாக,        மருத்துவமனையில் அமர்ந்தவர்களில் கையில் தொலைபேசி இல்லாமல் அமர்ந்தவர்களில் என்னையும் சேர்த்து 3 பேர் மட்டுமே, அனைவரையும் அமைதியாக கவனித்தேன். நகைசுவையாக இருந்தது. அங்கு அமர்ந்தவர்களில் கால்பேசி நோயாளிகள் கைபேசியால் நோய்வாய் பட்டு வந்திருப்பார்கள் அது அவர்களுக்கே தெரியாது.      முதல் முறையாக ரவா தோசை சாப்பிட்டேன்.     

2-10-2024

       மழையில் நனைந்து கொண்டே வியாபாரதிற்கு சென்றேன்.         "நீ கிளம்பி போ  நிக்காத எல்லாம் சரியா போகும் " என என் அம்மா கூறியது மழைக்காக மட்டும் அல்ல வேறு ஏதோ என் வாழ்க்கையை முன் நகர்த்த இயற்கை கூறிய ஒற்றை வரி என புரிந்து கொண்டேன், அதுவே ஒன்றை நிகழ்த்தும் என நம்புகிறேன்.         பட்டாசு கடைக்கு சென்று இருந்தேன் அனைவரோடும்.           நீலனை கவனித்தேன். "You tube"ல் சில நேர்காணலை பார்த்தேன்.அதையும் இனி தவிர்க்க விரும்புகிறேன்.               பல நேரங்களில் சும்மா இருப்பதும் நன்மையே. அதிகமாய் பேசுவதை விட அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது.             பாட்டியை சந்தித்தேன், சில அறிவுரைகளை பெற்றுக்கொண்டேன்.               சொந்த பந்தங்கள் எப்போதும் இதுபோல் நீளுமா என ஏக்கம் கொள்கிறேன்.             

1-10-2024

         எப்போதும் ஒரே மனநிலையில் அனைவரும் இருக்கமாட்டார்கள், அதை வெளிப்படுத்தவும் தயங்குவார்கள்.          சில பிரச்சனைகளை அப்படியே விட்டு விடுவது நல்லது.           இக்கட்டான சூழலில் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது.                இன்று வியாபாரம் பரவாயில்லை. வெயில் கொஞ்சம் உதவி செய்தது.              275 வளையம் போட்டேன், மெஷினை சரி செய்தேன்.            கடையில் இருந்தேன், கொய்யா காயை சுவைத்து சாப்பிட்டேன்.        நீலனை வைத்து இருந்தேன், மகாலட்சுமி யோடு சண்டை போட்டேன் கொஞ்சம்.         பட்டாசு கடைக்கு விளம்பரம் செய்தேன், என்னால் சிலர் வாங்குவார்கள் என நம்புகிறேன்.             சதுரகிரி செல்லவேண்டும் சீக்கிரம்.    மர நாற்காலி யை பெரியப்பாவிற்கு கொண்டு சென்றேன். வளையம் போடும் போது நிறைய பாடல்கள் கேட்டேன். RRR படத்தின் பாடல்களை ஏனோ திரும்ப...