Posts

Showing posts from April, 2022

லைப் ஆப் பை - வாசிப்பு அனுபவம்

Image
சிலர் வருடத்திற்கு ஒருமுறை பிடித்த இடத்திற்கோ பிடித்து கோவில்களுக்கோ சென்று வருவர் , அதேபோல நான் வருடத்திற்கு ஒரு முறை சில புத்தகங்களை வாசிப்பதும் சில படங்களை பார்ப்பதும் உண்டு , அதில் ஒரு படம் " Life of Pi " .  நம் ஆன்மாவை கழுவி நம் மனதிற்கு ஒருவித பேரலையை தரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று . நாவல் வெளிவந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின் படமாக்கப்பட்டது . அந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போது . படம் ஏற்படுத்தியதைவிட புத்தகம் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது . ஆழ்ந்த மயான மன அமைதிக்கு மனதை அழைத்துச் செல்கிறது , உணர்வுகளை வெளிப்படுத்த தெரியவில்லை .  20 நாட்களில் வாசித்து வாழ்ந்ததற்கே இப்படி என்றால் , 220 நாட்களுக்கு மேல் கடலில் மழைத்துளியின் அணுவைக் கூட ரசித்து வாழ்ந்த படேலின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இது கற்பனைக் கதைதானா என நினைத்து சந்தேகம் கொண்டேன். நாவலை வாசிக்கத் தொடங்கிய பின்பு தான் தெரிந்தது இது முற்றிலும் உண்மை கதை என்று . கனடாவிலிருந்து நல்ல கதையை தேடி இந்தியாவிற்கு பயணப்பட்டு வந்த யான்மார்ட்டேல் , பாண்டி

பற்று - குறும்படம் எழுதியது

Image
  " The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.”  கதாபாத்திர வடிவமைப்பு :- சுரேஷ் - படித்து முடித்த பட்டதாரி,அரசு வேலைக்காக காத்திருப்பவன்,கோவக்காரன், youtuber ,பெரியாரிஸ்ட், ஆனந்த் - ரோபோடிக் ஆராய்ச்சி மாணவன் , நிதானமாணவன்,தொலைநோக்குப் பார்வை கொண்டவன்,ஆத்திகவாதி. மர்ம நபர் - ஆனந்த் போன்ற தோற்றம் உடையவன் . சிறுவன் - வேகமாக பேசுபவன் . .(காலம் - 1 PM) இடம்-மலைமீது ஆனந்த்- நான் எடுக்கிறேன் நீ கொஞ்சம் தள்ளி நின்னு ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணு. (ஒரு மணி ஆச்சு சீக்கிரம் , கீழ போக வேணாமா ? )  சுரேஷ்-போடா எல்லாம் உன்னால தான் . ஆனந்த் - சரி சரி .பேசு சுரேஷ் - சாரி காய்ஸ் , இன்னைக்கு காலைல இருந்து எடுத்த அத்தனை புட்ஏச்சும் எப்படியே டெலிட் ஆயிடுச்சு.சாரி இன்னைக்கு ஃபர்ஸ்ட் நம்ம எங்க இருக்கோம் அப்படினா . ( ஆனந்த் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான் சுரேஷ் மலையில் ஒரு விழிம்பில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறான் ,ஆனந்த் கொஞ்சம் நெருங்கி வருகிறான் சுரேஷ் பின் நகர்கிறான் பள்ளத்தில் விழுந்து மறைகிறான்.ஆனந்த் எட்டிப் பார்த்து வியப்பில் ஆள்கிறான் .பயத