Posts

Showing posts from September, 2022

இராவணன் - பற்றிய வாசிப்பு அனுபவம்

Image
 அசுரன் - வீழ்த்த பட்டவர்களின் வீர காவியம் - நாவல் வாசிப்பு அனுபவம்.            வார்த்தைகள் வசப்பட மறுக்கின்றது, இராமாயணம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அறிந்திருக்கும் இதிகாசம், புத்தகவாசிப்பின் மூலமும் செவி வழியும், தொலைக்காட்சி தொடர் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள்.    இராவணன் பற்றிய என்னுடைய பல கேள்விகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதில்களை தந்தது, என்னுடைய சில சிந்தனைகளை தலைகீழாக மாற்றியது இந் நாவல் ,.    சீதையின் பிறப்பு மற்றும் இறப்பு என்னை உளுக்கியது, இந்த புத்தகமே வித்தியாசமான அணுகுமுறையுடன் கதை சொல்லுகிறது,... ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,.. சுயநலத்தைவிட அதிகமாகக் கண்டிக்கத்தக்க விஷயம் வேறொன்றும் இல்லை. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு மனிதன்தான் எல்லோரையும்விட மிகவும் துரதிர்ஷ்டமானவன். ஒருவன் ஏன் பிறக்கிறான்? வெறுமனே சாப்பிட்டு உடலைப் பருமனாக வளர்ப்பதற்கா? அல்லது சந்ததியினரை உருவாக்கிப் பன்றிகளைப்போல இனப்பெருக்கம் செய்வதற்கா? இந்த அழகான பூமியை உடற்கழிவுகளால் அசுத்தப்படுத்தவும், பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவிதமான மாற்றத்தையும் இ