Posts

Showing posts from October, 2022

ஹாரி பாட்டர் - அனுபவம்

Image
      இளம் வயதில் இதயத்தை பதம் பார்த்த காவியம், ' ஹாரி பாட்டர்' . ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நெருக்கமானவை, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்துள்ளேன்.  மகாபாரதத்தையும் இராமயணத்தையும் வெவ்வேறு புத்தகங்களில் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கற்பனையாக எழுத கூடிய காவியங்கள் அல்ல இவை ஆகவே உண்மையில் நடந்த இதிகாசங்கள் என தோன்றும், ஆனால் இங்கு முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்பட்ட கதை என்று அறிந்தும் கூட மனம் ஏற்க்க மறுக்கிறது சிறுவயது முதல் இன்று வரை.       2014 - ல் எனக்குள் சென்ற உலகம் , இன்னும் மீளவில்லை துளி அளவுகூட, எட்டு பாகத்தையும் வருடத்திருக்கு ஒரு முறை என்று எட்டு முறை உள்வாங்கினேன். வரைபட கருவியின் கம்பியை பிய்த்து மந்திர கோளாக பயன்படுத்தியுள்ளேன், ஒட்டக் குச்சி மீது அமர்ந்து பறக்க நினைத்தேன், மொட்டை மாடியில் நின்று ஹாக்ரிட் நம்மை ஹாக்வார்ட்ஸ்-க்கு அழைத்து செல்ல மாட்டாரா என ஏங்கியிருக்கேன், பள்ளிக்கூட சுவற்றில் மோதி விழுந்தேன் ,நான் படித்த ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஹெர்மாயினியைத் தேடியிருக்கிறேன், அது ஒரு பித்து நிலை.   என் உலகத்தை யாரிடமும் பகிராத சுயநலவாதியாக இருந்துள்ளேன், யாரா