Posts

Showing posts from March, 2023

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

Image
         சிறு மாற்றத்துக்காக வெண்முரசில் இருந்து கொண்டு மூச்சு வாங்குவதற்க்காக கையில் எடுத்த புத்தகம் " விண்ணளந்த சிறகு " . இயற்கை சார்ந்த சிறிய புத்தகம் ஆனால் மிகப்பெரிய உலகை காட்டும் விரிவான புத்தகம். நாற்பது ஆண்டுகள் தேடல் கொண்ட,  நூற்றி பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகம் . இயற்க்கை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் .    நாடு  என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல , அதில் ஓடும் ஆறுகள் , மலைகள் ,ஓடைகள் ,காடுகள் ,அங்கு வளரும் தாவரங்கள் ,காட்டுயிர்கள் , சிற்றுயிர்கள் , இவை அனைத்துமே ஒரு நாட்டின் முழு பரிணாமம் . ஓடி ஓடி பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் மறந்து இருப்பது மனிதர்களின் அறிவின்மை . பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல் , " நிஸகாந்தி " என்ற ஒரு பூச்செடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் இரவில் இரண்டு மணி நேரம் மட்டும் பூப்பதாகவும் , புத்தபூர்ணிமா நாளில் பூப்பது , என என்னை வியப்பில் ஆழ்த்தியது அதன் தகவல்கள்  . இந்த செடியை எழுத்தாளர் தன் வீட்டீலேயே வளர்த்து பார்த்து இயற்கையின் பூரண தரிசனத்தை அனுபவித்துள்ளா