Posts

Showing posts from February, 2022

காளையார் கோவில் பயணம்

Image
 காளையார் கோவில் பயணம்         காளையார் கோவில் முன்பு             சிறு வயதிலேயே பொன்னியின் செல்வன் படித்ததால் சோழதேசம் மீதும் அந்தக் கதாபாத்திரங்கள் மீதும்  தீராத காதல் , கல்லூரிக் காலத்தில் ஒரு ஆசிரியை எனக்கு பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை அறிமுகம் செய்து வைத்தார் , நான் ஒரு கட்டிட பொறியாளன் என்பதாலோ என்னவோ பெரிய கோவிலின் மீது மிகப்பெரிய பட்று வந்தது உடையார் நாவலின் கடைசி  ஐம்பது பக்கங்களை கோவிலில் வைத்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு பாகங்களை உடைய உடையார் நாவல் 3600 பக்கங்கள் கொண்டது .        புத்தகங்களின் வழியே உலகத்தை ரசிக்கும் வாசகன் நான் ,என்னைப் பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் நண்பர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக் கொள்கிறேன் , உடையார் நாவலை அறிமுகம் செய்த ஆசிரியைக்கும் இந்நேரம் நன்றியைக் கூறிக் கொள்கிறேன் . என்னுடைய பெரிய கோவில் பயணத்தையும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத்தால் விவரிக்க என்னால் இயலாது.      தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குள் செல்லும் போது எனக்கு எந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டதோ அதே அனுபவம் சிவகங்கை காளையார் கோவிலுக்கு செல்லும்போதும் ஏற்பட்டது காரணம் மருது சக

DUNKIRK - ஒரு பார்வை

Image
  கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்களில் மிக முக்கியமான படம் "Dunkirk" 2017 ஆம் ஆண்டு வந்த இப்படத்தின் மொத்த நேரம் 1.46 மணி நேரம் மட்டுமே இதுவரை வெளி வந்த போர் பற்றிய படங்களில் சிறப்பான படம் Dunkirk இது ஒரு உண்மை சம்பவத்தை மய்யப் படுத்தியது, 1940ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரின் போது  கப்பல் வழியாக படகுகள் வழியாக 198000 பிரிட்டிஷ் வீரர்களும் 140000 ப்ரான்ஸ் வீரகளும் காப்பாற்ற பட்டனர், அதை சுவாரசியம் குறையாமல் திக் திக் என கதை சொல்லுகிறார் நோலன். மற்ற போர் படங்களில் சண்டையும் ரத்தமும் வீரமும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இது மனிதநேயத்தை சொல்கிறது. நடிகர் " சிலியன் மர்ப்பி " யை படத்தில் பார்க்கவும் அதிர்சிக்கு உள்ளானேன் அவர் ஏற்றிருந்த காதாப்பாதிரம் பார்த்து,. அனைத்து போர் வீரர்களையும் காப்பாற்றி அனுப்பிய பின்பும் அடுத்த நாட்டு வீரர்களுக்காக காப்பாற்ற காத்திருக்கும் உயர்அதிகாரியின் மனம் கண் கலங்க வைக்கிறது. எப்போதுமே எந்த கிராபிக்ஸ் ம் இல்லாமல் படம் எடுக்க முனையும் நோலன் இப்படத்திற்காக எத்தனை கப்பலை உடைத்தார் என தெரியவில்லை,. 2012 என்ற படத்தில் உலகம் அழியும் நேரத்தி

கூகை நாவல் -வாசிப்பு அனுபவம்

Image
  கூகை நாவல் வாசிப்பு அனுபவம் எழுத்தாளர்" சோ. தர்மன்" கரிசல் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர், 35 வருடங்களாக குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதி வருபவர். "சூழ் "நாவளுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் . அரை நூற்றாண்டு வாழ்வியல், கோவில்பட்டி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களும் ஆச்சரியங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், "கூகை" ஒரு முக்கியமான படைப்பு  பகலில் கண் தெரியாத கூகை யை அனைத்து பறவைகளும் பகலில் கொத்தி கத்தி விரட்டுவதும், ஒடுங்கி அடங்கி போய் ஒளிந்து வாழ்வதும், பொறுமையும் காத்திருத்தலும், கூகையோடு தொடர்பு படுத்தி அந்த மக்களை சொல்லாமல் சொல்லும் விதம் உயர்வானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பட்ட ஓநாய் குல சின்னம் (Wolf totem ) தமிழில் சி. மோகன் எழுதிய நாவல் நினைவுக்கு வருகிறது, ஓனாயோடு தெரிந்தேவும் அந்த மக்கள் வாழ்க்கை முறை ஒன்றி இருப்பது போல, கூகை பற்றி அறியாமலே இந்த மக்களின் வாழ்க்கை முறை கூகை போலவே உள்ளது வியக்க வைக்கிறது ,.. பகலில் ஒடுங்கி போகும் கூகை, இரவில் ராஜாலி கழுகு போல சுற்றி வேட்டை ஆடி மற்ற உயிர

எஸ்.ரா-வின் எனது இந்தியா

Image
 எஸ். ராமகிருஷ்ணன் தமிழில் மிக முக்கிய எழுத்தலார்களுள் ஒருவர்,. இவர் எழுதிய " எனது இந்தியா " என்ற புத்தகம் படித்தால் போதும் இந்தியா பற்றி பல அறிய தகவல்களை தெரிந்து கொள்வதோடு நம்மை நாமே அறியலாம், அஞ்சு லட்ச ரூபாய்க்கு புத்தகம் வாங்கி தகவல்களை சேகரித்து வாரத்திற்கு 2000 ரூபாய் சன்மானதுக்கு எழுதிய நாவல், 600 பக்கங்களை கொண்ட இந்த நாவல் நமக்கு இந்தியாவின் பல ஆயிரம் ஆண்டு வரலாற்றையும் நம் பட்ட வலிகளையும் பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத கேள்விகளுக்கான பதில்களையும் தருகிறது,. இந்தியாவில் இருந்து என்ன என்ன கொள்ளை அடிக்கப்பட்டது எப்படியெல்லாம் கொண்டு செல்லப்பட்டது நம் நாட்டின் கலைகளை (மருத்துவம், அறிவியல், வானசாஸ்திரம், தற்க்காப்புகலை, போர்க்கலை, மற்றும் பல ) என்பதை ஆதாரதோடு கண்டு வாசிக்கும் போது ரத்தகொதிப்பில் உடல் முடிகள் உதிர்கின்றன . இப்போது நாம் இப்படி இருப்பதற்க்கு எத்தனை கோடி உயிர்கள் எப்படியெல்லாம் காவு வாங்கப்பட்டது என வாசிக்கும் போது இதயம் கணக்கிறது,. கோவினூர் வைரம், அக்பர் பேரனின் மயிலாசனம், நேதாஜி யின் பயணங்கள், புத்தனின் ஈர்ப்பு, இமயமலை வரலாறு, இந்திய சாலைகளின் உதயம், ஐஸ் க

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

Image
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து , ஐயா என் பெயர் நந்தகுமார் நான் ஒரு வாசகன் , பத்து வருடங்களாக புத்தகங்களை தொடர்ச்சியாக மிக மெதுவாக வாசித்தும் வாழ்ந்தும் வருகிறேன் . நான் ஒரு  குறும்பட இயக்குனரும் கூட ,  DCE , BE(CIVIL) படித்துள்ளேன் . தற்போது பலசரக்கு கடைகளுக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன் .  வேள்பாரி நாவலை 11.04.2020 - அன்று வாசித்து மட்டுமே முடித்தேன் ஆனால் என்றும் என் சிந்தையில் பயணிக்கிறான் வேள்பாரி , நான் அதிகம் வேள்பாரி பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை அவன் எனக்குள்ளேயே இருக்கட்டும் , வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இறுதியில் பேயத்தேவரின் மரணம் என்னை இரண்டு நாட்களுக்கு மேல் அழுக வைத்தது ,அப்போது எனக்கு வயது 16 .  அதன்பின் நான் வாசித்த எந்தப் புத்தகமும் என்னை அந்த அளவுக்கு அழ வைக்கவில்லை , 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்கும் ஆதி மலையின் பெருங் கடவில் திசைவேழர் - க்கு சிலை வைத்ததை நினைத்து அழுதேன் ஏங்கி ஏங்கி இதயமும் துடிதுடித்தது , வேள்பாரி -யில் இறுதியில் வரும் அந்த ஒற்றை வரியில் , " அறங் காக்கும் தெய்வ