Posts

Showing posts from August, 2022

மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
 மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம் அனைவரையும் போலவே நானும் அறிந்திருந்தேன் , இந்த பெயருக்கு பின் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும் என துளியும் நினைத்தது கிடையாது.    39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த "கான்சாகிப் முகம்மது யூசுப் கான் மருதநாயகம்" -ன் வரலாறு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.   சாத்தியம் இல்லாத சாதனைகள் படைத்த இவரின் பிறப்பு குறித்து பல தரப்பட்ட கருத்துக்களும் கதைகளும் நிலவுகிறது. மரணம் அடைந்து இரண்டு வாரங்களுக்குப்பின் இவரைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் எழுதிய கடிதத்தில், "மருதநாயகம்" பாரம்பரிய பாண்டிய வம்சாழியை சார்ந்தவர் என்றும், மற்றொரு கடிதத்தில் கிருஸ்த்தவ தாய்க்கும், இஸ்லாமிய தந்தைக்கும் பிறந்தவர் என்றும், 1990களில் செய்த ஆய்வில் மருதநாயகம் வேளாலர் குலத்தைச் சார்ந்தவர் என்றும், ஏழை இஸ்லாமிய தையல்கார தந்தைக்கு பிறந்தவர் என்றும், பல கதைகள் உலாவுகின்றன.                பிறப்பா ஒரு மனிதனை தீர்மானிக்கிறது? செய்த செயல்தானே முக்கியம் ? இவரின் பிறப்பை விட்டு வரலாற்றை பார்த்தால் ஒரு சாகச வீரனின் துணிவை பெறலாம் நாம். போர் வீரர், கணக்காளர், மொழிபெயர்ப்பாளர், படைத்தளபதி, ஆளு

"சிப்பியின் வயிற்றில் முத்து" - நாவல் வாசிப்பு அனுபவம்

Image
  "சிப்பியின் வயிற்றில் முத்து" - நாவல் வாசிப்பு அனுபவம் பல்வேறு புத்தகங்களை வாசித்தாலும் சிலவற்றைத்தான் பகிரவும் எழுதவும் தோன்றுகிறது. 1980 ஆம் ஆண்டு வங்காளத்தில் வெளியான இந்நாவல் நம் தமிழக மீனவர்களின் வாழ்வியலை தத்ரூபமாக வெளிகாட்டுகிறது. வங்காள மொழியில் ஒரு தமிழ் கதை. போதிசத்வ சைத்ரேய 1950 ஆம் ஆண்டு தமிழக மீன்வளத்துறையில் பணியாற்றுகிறார், அக்காலக் கட்டத்தில் மீனவர்களின் வித்தியாசமான தொழில்முறையும், கடல் அலைக்கே சவால் விடும் அசாத்திய துணிச்சலை கண்டு வியக்கிறார். இரண்டு வருடம் மட்டுமே தமிழகத்தில் பணியாற்றிய இதன் ஆசிரியர், இந்த நாவலுக்காக இருபது வருடம் உழைத்துள்ளார். பத்து முறை மாற்றி திருத்தி எழுதியுள்ளார். இவரின் தேடலையும் உழைப்பையும் வணங்குகிறேன். இந்நாவலை மீனவர்களின் வாழ்வியல் என்று மட்டும் சொல்ல முடியாது, அப்போதைய தமிழக மக்களின் மனநிலையை உணர முடிகிறது. வாஞ்சி நாதனின் ஆஷ் கொலையை நேரில் கண்டது போல் உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் வந்த 'கடல்' படத்திற்கான கதை இந்நாவலின் சில பக்கங்களிலிருந்து உருவாகியிருக்க கூடும். மீனவர்களை பற்றி ஆழிசூழ் உலகு, செம்மீன் போன்ற நாவல