22-08-2025
நாளை நமதே அதிகாலையில் விரைவில் எழுந்து உடற்பயிற்சி செய்ய விழைகிறேன் சில மாதங்களாக என் சோம்பேறி தனத்தால் சோம்பிப்போய் முட்டாளாக உள்ளேன் , என்னை மீண்டும் செதுக்க வேண்டும் , என்னுடைய நான் வெளிவரவேண்டும் , ஒவ்வொரு நாளும் என்னை நான் மேம்படுத்த வேண்டும் , என் நேரத்தையும் உழைப்பையும் சரியான பாதையில் செலுத்த விழைகிறேன் , அதற்கு இயற்க்கை வழிகாட்ட வேண்டும் , காலம் போல் மிக வேகமான ஒன்று வேறு இல்லை என சில நாட்களாக புரிந்துகொண்டேன் . கிடைக்கின்ற நேரத்தை உபயோகமாக பயன்படுத்த ஆசை படுகிறேன் , நாளை சில திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறேன் , அதை முழுமையாக முடிக்க வேண்டும் , பார்ப்போம் .