Posts

Showing posts from December, 2025

12-12-2025

 பல சிந்தனைகள் ஓடியது மனதில், உடல் சுறுசுறுப்பாக இருந்தது, நீலனின் சேட்டைகளை ரசித்தேன். டேப் மெஷின் க்கு பணம் கேட்டார்கள் கொடுக்க வேண்டும், குழப்பமாக உள்ளது. பல செயல்கள் முன்கூட்டியே யூக்கிக்க கூடியனவாக உள்ளது. நினைத்தது நடக்கிறது எதிர்மறையான எண்ணங்கள். பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை சற்று கவலையாக உள்ளது. உடல்நலத்தை கவனிக்க வேண்டும். அம்மாவிற்கு வேலை அதிகம் 

13-12-2025

 பெரியப்பாவிற்கு சர்கரை அளவு அதிகரித்து விட்டதால் மருத்துவமனைக்கு சென்று வந்தோம், சில தகவல்களை அறிந்து கொண்டேன். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட உழைக்க வேண்டும். பழைய கடன்கள் மனதை பாலாக்கும்.   டேப் மிசின் பழுதாகி விட்டது சரி செய்ய வேண்டும். மகாலட்சுமி சில நேரங்களில் மனம் நோகும்படி பேசுகிறாள் 

14-12-2025

 அடிக்கடி கேட்ட பாடல்களை சில வருடங்களுக்கு பின்பு  புதிதாக கேட்க்கும் பொழுது நிறைய நினைவுகள் எழுகின்றன. தியான் லலித் நான் மூவரும் கிணற்றுக்கு சென்று வந்தோம். நீலன் உடலும் மனமும் தேறி வருகிறான். நேரத்தை கவனிக்க வேண்டும்......சோம்பல் கூடாது.  சுற்றி அத்துணை பேர் இருந்தும் தனியனாக உணர்கிறேன்,. வார்த்தைகளை பகிர்ந்துக்கொள்ள உண்மையாக எவரும் இல்லை. மற்றவர் கண்களுக்கு நான் சுவாரசியம் இல்லாதவனாக உள்ளேன் போல். " உணர்ச்சிகளை பகிரவும் கேட்கவும் எவரும் இல்லாதபோது  மனம் கணக்கிறது "

15-12-2025

 நேரம் நம் பொறுப்பில் இருக்க வேண்டும், நேரத்தின் பொறுப்பில் நாம் இருக்க கூடாது. எந்த ஒரு நிலையிலும் நம்பிக்கையையும் இயன்ற வரையிலான முயற்சியையும் இழக்க கூடாது. பேசும் போது தேவை அற்ற வார்த்தைகளை தவிர்க்க பழகிக்கொள்ள வேண்டும் 

16-12-2025

 இயந்திரங்களை சரி பார்த்தேன், தெளிவாக இல்லை குழாய். மழை பெய்தது, சிலரின் சோம்பல் பலருக்கு சுமையாக உள்ளது. சிவலிங்காபுரம் டீ கடை சீனிவாசன் நிறைய பேசினார், கடைக்கு வந்தவர் ஒருவர் குழம்பிபோய் பேசினார். சிந்தித்து செயலாற்ற வேண்டும். காந்தா திரைப்படம் பாதி பார்த்தேன். சில சிந்தனைகள் ஓடுகின்றன, இரவு உறக்கம் நலமாக வரவேண்டும். 

17-12-2024

11-12-2025

 குபேந்திரன் என்பவர் இறந்துவிட்டார் , அவரை பற்றி சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் திடீரென அவர் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது . நேரத்தை இன்னும் உபயோகிக்க வேண்டும் , "நேரம் மிக முக்கியமான ஒரு ஆயுதம் நம் வாழ்க்கைக்கு " நேரத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டும் , சில முன்னேற்பாடுகளுடன் அன்றைய நாளை தொடங்க வேண்டும் சில நேரங்களில் மிக சோர்வாக உணர்கிறேன் ,

10-12-2025

 ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒவ்வொரு செயல்கள் நடக்கின்றன , பல செயல்கள் இணைந்து ஒரு செயலை நிகழ்த்துகின்றன , நிதானமாக யோசிக்கும்போது நம்மை திகைக்க வைக்கின்றன .  ஜெயமோகனின் சில வீடியோக்களை பார்த்தேன் பல கேள்விகளும் முரண்களும் எழுந்தன , இன்னும் மேலே செல்ல வேண்டும் .  தியான் , ஆரியன் , நீலன் , மூவரின் சேட்டைகளை ரசித்தேன் .  கைபேசி பழுதாகிவிட்டது பயந்து விட்டேன் . 

09-12-2025

 சிவகாசி TPS FIRE ஆபீஸ் சென்றோம் ஆரியன் நான் கணேஷ் மாமா மூவரும் , பயணம் இனிதாக அமைந்தது , இன்று கம்பனியில் அம்மாவிற்கு வேலை அதிகம் , நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் , நீலன் உடல்நிலை சிலநாட்களாக சரி இல்லை அது கவலையாக உள்ளது அனைவருக்கும் .  இனி தினமும் எழுத வேண்டும் , ஓம் நமச்சிவாய , ஜெயமோகன் என் கடிதத்திற்கு பதில் அனுப்பாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது , இன்னும் அதிமாக வாசிக்க வேண்டும் , புதியன எழுத வேண்டும் , பார்க்கலாம் . ஒவ்வொரு நாளையும் சரியாக பயன்படுத்த வேண்டும் .  எக்கச்சக்க எண்ணங்கள் , ஏதேதோ குரல்கள் காதில் ஒலிக்கின்றன , சில சமயம் அந்த இயந்திரங்களின் இறைச்சல் , நிதானம் அற்று நிலையில்லா வார்த்தைகளோடு சுற்றி திகழ்கிறேன் , எவரிடமும் பேச பயம் , ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து பேசுகிறேன் மிக குறைவாக , என்னை நான் மேம்படுத்தவேண்டும் .  . கண்மாய் நிறைய நீர் உள்ளது மகிழ்ச்சி ஆனால் காலைக்கடன் , மாலைக்கடன் , முடிப்பதுதான் கொஞ்சம் சிரமமாக உள்ளது . \ "நாம் ஒன்று செய்ய வேறு ஒன்று நடக்கிறது , அவரவர் புரிதலுக்கு ஏற்றார் போல் அனைத்தும் மாறிவிடுகின்றன அ...

09-09-2025

        ஜெமோகன்   என்னுடைய குருவை சந்திக்க செல்கிறேன் விரைவில் ,எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் ,ஒரு வாரமாக இதே யோசனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது . தனியாக செல்ல இருக்கிறேன் என்ன செய்ய ஏது செய்ய என ஒரே குழப்பம் . பல வருட கனவு நினைவாகுமா ?      என் வாழ்வின் மிக முக்கியமான நபர் , இவரை அறிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் என் வாழ்வு இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது , எனக்குள் ஏற்படுத்திய அலைகள் இன்னும் நிற்காமல் அடிக்கிறது ஒவ்வொருமுறையும் புதியதாக , அவரை எனக்கு அறிமுக படுத்தியது எழுத்தாளர் பாலகுமாரன்.    நான் பல எழுத்தாளரர்களை கடந்து வந்து விட்டேன் , இவரை தொட்ட நாள் முதல் இன்று வரை என்னால் விட்டு விலக இயலவில்லை , ஜெயமோகன் என்ற பெயரை நினைக்காத நேரங்களே இல்லை என் ஒவ்வொரு நாளிலும் , சில முறை மட்டுமே மெயிலில் பேசியுள்ளேன் அனைத்தையும் திரும்ப திரும்ப எடுத்து பார்ப்பேன் .          நிறைய யோசிக்கிறேன் ஆனால் வார்த்தைகளாக வர மறுக்கிறது . நடக்கட்டும் பார்க்கலாம் . 13-09-2025 அன்று சந்திக்க இருக்கிறேன் . பதட்டமாக உள்ளது ....

மெய்ப்பொருள் அனுபவம்

       'இருள்' என்ற மலையாள படத்தின் ஒரு நிகழ்வை கொண்டு , 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற படத்தை இயக்கினேன்.        இப்படத்தில் எனக்கு மிக அணுக்கமான கௌதம், மணிகண்டன், கவி, அஸ்வத், நால்வரும் நடித்திருந்தனர்.     இப்படம் 'BEHEINDWOODS' ல் ஒரு போட்டிக்காக எடுக்க பட்டது. எதிர் பாராவிதமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.        இதற்க்காக இருபத்தி இரண்டு நாட்கள் ஒரே ஆடையுடன் நால்வரும் திரிந்தனர். அதற்காக அவரவர் இல்லங்களில் அவர்கள் வாங்கிய திட்டுக்கள் ஏராளம், என்னிடமும் கேட்டார்கள்  ' டெய்லி கம்மாக்குள்ள போயீ என்னடா செயிரீங்க நந்தா, கெளதம் நைட் தூக்கத்துல என்னென்னமோ கத்துறான்னு 'அவன் அம்மா. 'மணி ய நீயே வச்சுக்கோயா நந்தா' னு அவன் அம்மா. நான் மிக அதிகமாக தொந்தரவு செய்தது இவர்கள் நால்வரை தான்,  கொஞ்சம் கூட முகம் கோணாமல் சிரித்து கொண்டே அனைத்தையும் எதிர்கொண்டனர். கொரானாவிற்கு மிக நன்றி, அந்த நேரங்களில் மிக தீவீரமாக செயல் புரிந்தவர்களில் நானும் ஒருவன், ஒவ்வொரு நாளையும் மிகவும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டேன். என் படங்களில் ...