இராவணன் - பற்றிய வாசிப்பு அனுபவம்

 அசுரன் - வீழ்த்த பட்டவர்களின் வீர காவியம் - நாவல் வாசிப்பு அனுபவம்.







     
     வார்த்தைகள் வசப்பட மறுக்கின்றது, இராமாயணம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அறிந்திருக்கும் இதிகாசம், புத்தகவாசிப்பின் மூலமும் செவி வழியும், தொலைக்காட்சி தொடர் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள்.

   இராவணன் பற்றிய என்னுடைய பல கேள்விகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதில்களை தந்தது, என்னுடைய சில சிந்தனைகளை தலைகீழாக மாற்றியது இந் நாவல் ,.
   சீதையின் பிறப்பு மற்றும் இறப்பு என்னை உளுக்கியது, இந்த புத்தகமே வித்தியாசமான அணுகுமுறையுடன் கதை சொல்லுகிறது,... ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,..

சுயநலத்தைவிட அதிகமாகக் கண்டிக்கத்தக்க விஷயம் வேறொன்றும் இல்லை. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு மனிதன்தான் எல்லோரையும்விட மிகவும் துரதிர்ஷ்டமானவன். ஒருவன் ஏன் பிறக்கிறான்? வெறுமனே சாப்பிட்டு உடலைப் பருமனாக வளர்ப்பதற்கா? அல்லது சந்ததியினரை உருவாக்கிப் பன்றிகளைப்போல இனப்பெருக்கம் செய்வதற்கா? இந்த அழகான பூமியை உடற்கழிவுகளால் அசுத்தப்படுத்தவும், பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவிதமான மாற்றத்தையும் இவ்வுலகில் ஏற்படுத்தாமல் வெறுமனே மடிந்து போவதற்குமா? நம் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கின்ற இருளில் ஒரு சிறு விளக்கையாவது ஏற்றாமல் போனால் அவனது வாழ்விற்கு என்ன மதிப்பு இருக்கிறது?

விபீஷ்ணன், கும்பகர்ணன், அனுமன், லக்ஷ்மணன், சுக்ரீவன், மேகநாதான், மயன், மாரீசன், மேலும் பல கதாபாத்திரங்கள் முன்னரே அறிந்திருந்தாலும் கூட நம்மை இந்த புத்தகம் வேறு கோணத்தில் வேறு சிந்தனையில் பார்க்க வைக்கிறது அதுமட்டும் இல்லாமல் நம்பவும் வைக்கிறது,..

இலங்கையின் தோற்றம், மக்களின் மன நிலை, கலாச்சாரம், மற்ற நாடுகளின் இலங்கையின் மீதுள்ள எண்ணங்கள் அனைத்தையும் ஆசிரியர் மிக தெளிவாக எடுத்துறைக்கிறார்.
  
சீதை இராவணனின் மகள் என்ற செய்தி திட்டுக்கிட வைத்தது, மனம் நம்ப மறுத்தது, இருந்தும் கதையின் ஓட்டதோடு நம்பத்தகுந்தபடி சரியாக பொருந்தியது என்னை ஆச்சரியப்படுத்தியது,.

ஆசிரியர் இராவணனின் நல்ல செயல்களையும் கெட்டவைகளையும் மறைக்காமல் கூறி இருப்பது சிறப்பு,.
 
     இந்த நாவல் இராவணன் மற்றும் பரதன், இவர்களின் மன எண்ணங்களின் வழி செல்கிறது,.

வானசாஸ்திரம், மருத்துவம், உட்பட 27 க்கும் அதிகமான நூல்களை எழுதியவரும், இசை கலையில் வித்தகரும், தீவிர சிவ பத்தணும் ஆன இராவணன்,  இந்த தேசத்தில் எப்போதும் கொடூரமானவராக சித்தரிக்கப்படுவது ஏன்?

புகழ், பணம், அதிகாரம் ஆகிய அனைத்தையும் போரில் வெற்றி பெறுபவன் எடுத்துக் கொள்வான். கவிஞர்கள் அவனைப் புகழ்ந்து பாடுவர். காலம் செல்லச் செல்ல, அவனைப் பற்றிய புராணங்கள் பெருகும். வெற்றியாளன், நல்ல பண்புநலன்களின் மொத்த உருவமாகச் சித்தரிக்கப்படுவான். அவன்தான் எல்லோரைவிடவும் சிறந்தவனாக ஆவான். ஒவ்வொரு மனிதனையும்போலவே, அவனும் தன் வாழ்வில் நல்ல காரியங்களையும் மோசமான காரியங்களையும் செய்தவன் என்றாலும், வெற்றியாளனின் நல்ல செயல்கள் மட்டுமே, மிகைப்படுத்தப்படும். அவனது மோசமான செயல்கள் நினைவிலிருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும். வெற்றியாளனின் நடவடிக்கைகளை, சமுதாயத்தில் வழக்கத்திலுள்ள ஒழுக்கநெறிகளால் நியாயப்படுத்த முடியாவிட்டால், அவன் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்படுவான். கடவுளை யாரால் கேள்வி கேட்க முடியும்? இவ்விதத்தில் என் நாடு பல கடவுள்களை உருவாக்கியது.

வென்றவன் கடவுளாகவும் வீழ்ந்தவன் கொடூரமானவனாகவும் நடத்த படுவது இன்றும் நிகல்வது தானே?

 இந்நாவலில் மாயாஜால மந்திர வித்தைகள் எதுவும் கிடையாது, கதையை உள்ளது உள்ளபடி நம்பத்தகுந்தபடி எழுதியுள்ளார் இதன் ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன், தமிழில் எழுதியவர் நாகலட்சுமி சண்முகம்.
     

 உலகத்தாரோடு ஒத்திசைவாகச் செல்வதற்கு, நீங்கள் யதார்த்தமானவராக இருக்க வேண்டும் என்றும், உங்களுடைய ஈன வாழ்க்கை வழங்குகின்றவற்றைக் கொண்டு நீங்கள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என்றும் உலக அறிவு பெற்றப் பல நபர்கள் கூறியுள்ளனர். ஆனால் நான் பெரும் கனவுகளைக் காண்பவன். நான் வெறுமனே இந்த உலகத்தில் மற்றவர்களோடு ஒத்திசைவாக இருப்பதை விரும்பவில்லை. 

ஒரு கலைஞ்சனாக இராவணனை பார்க்கையில் , சாதாரண காம இச்சைக்கு அடிமைபட்டவனாவகவும் சராசரி சுகபோகங்களுக்கு ஏங்குபவனாகவும் இருக்க வாய்ப்பில்லை,  அவ்வாறு இருந்தால் இத்தனை கலைகளில் எப்படி தேர்ச்சி பெற முடியும் ? அவ்வகையில் இன்னூல் கூறுபவை பல உண்மையாக இருக்க கூடும்,.

தன்னை சுற்றி அறிவார்ந்த ராஜசபை நிபுணர்கள் இருந்தும் எவர் கூற்றுக்கும் செவி சாய்க்காமல் தன் விருப்பம் போல செயல் பட்டு சிறப்பாக வாழ்ந்து மடிந்த பேரரசன் இராவணன்,.
 தன்னை சுற்றி பழம்பெருமை பேசி கொண்டு சாஸ்திர சம்பிரதாயங்கள் என்ற பெயரில் மக்களை வதைத்த பிராமண கூட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றி துன்புற்ற அரசன் ராமன்,.
இலக்ஷ்மணன், சீதை, வாலி, இராவணன், கும்பகர்ணன், மேகநாதான், அதிகாயன், இன்னும்பல நல்ல உள்ளங்களின் நல்லவைகளை அறியாமல் அவர்களின் மரணத்திற்கு முழுக்க காரணமானான் இராமன்.
தான் மிகவும் நேசித்த இரண்டு உயிர்களை ராமன் தனது தர்மத்திற்காகத் தியாகம் செய்திருந்தான். அவன் மேலும் மேலும் வருத்தமும் மனச்சோர்வும் கொண்டான், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்தான். இறுதியில், சரயு நதியின் இருண்ட நீரில் அவன் நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தான்( தற்கொலை செய்து கொண்டான் ). வரலாற்றிலேயே மிக அதிகப் புகழ்பெற்ற ஒரு பேரரசனைத் தோற்கடித்திருந்த ஓர் அரசனுக்கு இது ஓர் இழிவான முடிவு. ராமன் தனது ஆகம நூல்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பின்பற்றி நடந்தான். அந்த தர்மத்திற்காக, அவன் ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்தான். தனது மனைவியையும் தனது சகோதரனையும் தனது மனசாட்சியையும்கூட அவன் தியாகம் செய்தான்.

 என்னென்னவோ எழுத நினைத்து இறுதியில் எதுவும் எழுதாமல் அரைகுறையாக, சுயநினைவற்ற நிலையில் வெளியிடுகிறேன் இக்கட்டுரையை.
 ராம பக்தர்களும் ராவணனை வெறுப்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
   
         வாழ்கையில் எதையோ தேடிக் கொண்டே இருப்பவர்கள் இந்த 620 பக்க நாவலையும் வாசியுங்கள் சில  விடைகள் கிடைக்கலாம்.

                                                     - நந்தா 




         


Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்