ஹாரி பாட்டர் - அனுபவம்



      இளம் வயதில் இதயத்தை பதம் பார்த்த காவியம், ' ஹாரி பாட்டர்' . ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நெருக்கமானவை, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். 

மகாபாரதத்தையும் இராமயணத்தையும் வெவ்வேறு புத்தகங்களில் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கற்பனையாக எழுத கூடிய காவியங்கள் அல்ல இவை ஆகவே உண்மையில் நடந்த இதிகாசங்கள் என தோன்றும், ஆனால் இங்கு முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்பட்ட கதை என்று அறிந்தும் கூட மனம் ஏற்க்க மறுக்கிறது சிறுவயது முதல் இன்று வரை. 

     2014 - ல் எனக்குள் சென்ற உலகம் , இன்னும் மீளவில்லை துளி அளவுகூட, எட்டு பாகத்தையும் வருடத்திருக்கு ஒரு முறை என்று எட்டு முறை உள்வாங்கினேன்.

வரைபட கருவியின் கம்பியை பிய்த்து மந்திர கோளாக பயன்படுத்தியுள்ளேன், ஒட்டக் குச்சி மீது அமர்ந்து பறக்க நினைத்தேன், மொட்டை மாடியில் நின்று ஹாக்ரிட் நம்மை ஹாக்வார்ட்ஸ்-க்கு அழைத்து செல்ல மாட்டாரா என ஏங்கியிருக்கேன், பள்ளிக்கூட சுவற்றில் மோதி விழுந்தேன் ,நான் படித்த ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஹெர்மாயினியைத் தேடியிருக்கிறேன், அது ஒரு பித்து நிலை.  

என் உலகத்தை யாரிடமும் பகிராத சுயநலவாதியாக இருந்துள்ளேன், யாராவது 'ஹாரி பாட்டர்' யை மடிக்கணினியில் பதிவு செய்யக் கேட்டால் என்னிடம் இல்லை அழித்துவிட்டேன் ,எனக் கூறியிருக்கிறேன். நான் பகிராத பல திரைபடங்கள், பல புத்தகங்கள் உள்ளன, அவற்றை பற்றி மற்றவர் பேசினால் கோபம் வரும், அவை என்னுடையது இப்போது கூட பெயர்களை சொல்லவில்லை, அதன் புனிதத்தன்மை கெட்டு விடுமோ மற்றவர்களால், ஏளனம் செய்யப்பட்டு விடுமோ என்ற எண்ணம்.  

என் நெருங்கிய தகுதியான நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மிகச் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.  

'பொன்னியின் செல்வன்' என் ஆத்மார்த்தமான நாவல் வாசிக்கும் போதே திரும்ப திரும்ப படித்த நாவல், என் நண்பன் ஆனந்திடம் கூறினேன் அப்போதே இதை 12 பாகங்களாக எடுக்க போகிறேன் திரைபடமாக என , மணிரத்னம் எடுக்க ஆரம்பத்த போதே நின்றுவிட வேண்டும் என மனம் குமுறியவன் நான், கொஞ்சம் பொறாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.


 


என் வைரமுத்து இல்லாத மணிரத்னம் படம் ,என் ஆசான் ஜெயமோகன் வசனம், படம் பார்த்தேன், சில இடங்களில் ஏமாற்றம் அடைந்தாலும் இதை விட சிறப்பாக எவனால் எடுக்க முடியும் ? என்ற சிறிய ஆனந்ததோடு வெளியில் வரும்போது எனக்கு முன்னால் சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவன் கேட்கிறான்,

 ' மச்சி இந்த சரத்குமார் யாருடா ? பிரகாஸ்ராஜ்க்கு ? ' மற்றொருவன் ' பிரகாஸ்ராஜ் தம்பிடா' மறுபடியும் 'அப்போ பார்த்திபன் இல்லையா' மற்றொருவன் ' அவன் ஐஸ்வரியா ராய் அண்ணன் டா,...'


      என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அதோடு கோபத்தால் கண் கலங்குகிறது. என் 'பொன்னியின் செல்வன்' நாவல் மீது கரைகள் படுகிறது. இது போல் கலங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற நல்ல எண்ணத்தில் அணைவருக்கும் பகிர்வதில்லை, உங்களை போல் சிலருக்கு பகிர்ந்தும் பதில் வருவதில்லை கொஞ்சம் வருத்தம் தான் , 'யாவரும் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக சூரியன் மரித்தா போய்விடுகிறது?


       ஹாரி பாட்டார், ரான், ஹெர்மாயினி, ஸ்னேப், சீரியஸ் பிளாக், டம்புள்டோர், மேல்பாய் ,என ஒவ்வொரு கதாபாத்திரமும் நெருக்கமானவை, என்னோடு உரையாடுபவை.

       ஹாரி பாட்டரை எனக்கு அறிமுகப்படுத்திய விஸ்வநாத மூர்த்தி அண்ணனுக்கு, கடிதம் எழுதி ஒரு செயின் வாங்கி கொடுத்தேன் அப்போதே. ஹாரி பாட்டர் -ன் அடுத்த கதையை படித்து முடித்து விட்டேன், என்ற செய்தியை சிலருக்கு அனுப்பி பதில் விரவில்லை, அதில் அவரும் ஒன்று, வருத்தம்தான்.

     

      'Harry Potter and the cursed Child' நாவல் ஹாரி பாட்டரின் அடுத்த பாகம். 2015ல் ஜே.கே. ராவ்லிங் இன்னும் இருவரோடு சேர்ந்து எழுதியது இன்னும் படமாக எடுக்கவில்லை.

      ஹாரியின் இரண்டவாது மகன் ஆல்பஸ்-ம் ,மேல்பாயின் மகன் ஸ்கார்பியஸ் , ஹெர்மானியின் மகள் ரோஸ், வால்டமோர்டின் மகள் டெலிபி, என மீண்டும் நம்மை அந்த உலகத்திற்கு அழைத்து செல்கிறது, இதுவரை இருந்தத்தின் தரத்தைக் குறைக்காமல் . வாசித்த எட்டு நாட்களும் நான் நானாக இல்லை.

உலகம் முழுக்க ஹாரி பாட்டரின் ரசிகர்கள் பரவியுள்ளனர் என்னைப்போலவே பித்து நிலையில். 64 மொழிகளில் வந்துள்ளது 'ஹாரி பாட்டர்' புத்தகம் .கண் தெரியாதவர்களுக்காக 'சைன்' எழுத்திலும் வந்துள்ளது.

  ஹாரி பாட்டரில் பயன்படுத்திய மாதிரிகளின் பொருட்களும் ஆடைகளும் இணையத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.

  ஹாரி பாட்டரை படம் பார்க்கும் போதும், படிக்கும் போதும் அங்குள்ள குளிரும், இருளும், பயமும் சூழ்ந்து விடுகிறது. கற்பனையாக இருந்தாலும் தொடர்பு கொள்ள முடிகிறது. 

Harry Potter and the Cursed Child புத்தகத்தில் வசனங்களின் வழியேகதை நகர்ந்து செல்கிறது, இருந்தும் உள்ளுணர்வில் ஒவ்வொரு காட்சியும் திரைபடமாக ஓடுகிறது, முக அசைவுகளோடும் வியர்வை துளிகளோடும்.

 கற்பனை உலகில் என்னை இத்தனை ஆண்டுகளாக திளைக்க வைத்து கற்பனையில் கட்டிப் போட்டவர். ஜே.கே. ராவ்லிங்.


       


      நான் தளர்வு கொள்வதும், சோகம் கொள்வதும் மிக அரிது அந்த அரிதான தருணங்களில் இவரையும் நினைத்துக் கொள்வேன். ஜே.கே. ராவ்லிங் -ன் திகைக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு நம்மை முன்னகர்த்தும்.

      ஹாரி பாட்டரின் கதைக்கான கரு ஐந்து மணி நேர ரயில் தாமதத்தால், ரயில்வே நிலையத்தில் தன் கைக்குட்டையில் எழுதப்பட்டது என கூறினால் நம்புவீர்களா? நான் அதிகம் பகிர போவதில்லை, ஆர்வம் உள்ளவர்கள், தேடினால் பயன் அடைவீர்கள் ஆத்மார்த்தமாக, வியக்க வைக்கும் கற்பனை உலகில் திளைக்க தேடுங்கள்.

  வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை என நினைப்பவர்கள் ஹாரி பாட்டர்-யை தொடுங்கள் , நிலை மாறும் .
                                     

                                 - நந்தகுமார்

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்