03-09-07
இன்று சூரியன் உதிப்பதை உணர்ந்து கொண்டே மழைச்சாரலில் வீட்டின் மேல் பகுதியில் உடற்பயிற்சி செய்தேன் , இரவு நன்றாக உறங்கினேன் .
வியாபாரம் நன்றாக சென்றது , வானிலை அழகாக இருந்தது . ஆடு ஜீவிதம் படம் பாதி பார்த்தேன் , புத்தகம் தந்த பிரமிப்பு படத்தில் எனக்கு ஏற்படவில்லை , நாளை மீதியை பார்க்க வேண்டும் .
வளையம் போட சென்றேன் 200 போட்டேன் , ரீச்சார்ஜ் ஜெராக்ஸ் வேலைகளை செய்தேன் , நாளை வியாபாரத்திற்கு சரக்கு எடுத்து வைத்தேன் , மாலையில் 1 கிலோமீட்டர் நடந்தேன் .
தினமும் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவது இல்லை , அன்றாட சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அதன் போக்கில் நம் நேரங்கள் சென்று விடுகிறது . இனி இன்னும் கொஞ்சம் திட்டம் தீட்டி நேரத்தை நம் கையில் கொண்டு வரவேண்டும் . பார்ப்போம் வெல்வோம் .
Comments
Post a Comment