1-09-2024
ஏதேதோ எண்ணங்கள் நிறைய கனவுகள் , தடையாக மூளைச்சோம்பல் , இந்த வருடமே முடியப்போகிறது இன்னும் நிறைவாக ஒன்றுமே எழுதவில்லை .இன்று முதல் தினமும் எழுத வேண்டும் .நேற்று கடையில் குளிர்சாதனப்பெட்டி வைக்கும் இடத்தில் மாற்றம் செய்தோம் . ஜெராக்ஸ் ரூம் ல் ஒரு செட்டப் செய்தேன் , நேற்று முழுவதும் வேலையிலேயே ஓடிவிட்டது . லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற படம் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது , 1960 ல் இப்படி ஒரு படம் எடுத்தது அதிசயம் .ஜமா என்ற படம் இன்று பார்த்தேன் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது , கல்யாணம் என்ற முதன்மை கதாபாத்திரம் ஓடிக்கொண்டே இருக்கிறது நினைவில் .
சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து 20 நாட்கள் அதிகாலையில் ரன்னிங் சென்றேன் , அப்போது மனதும் உடலும் துடிப்பாக இருந்தது , அம்மாவிற்கு உடல்நிலை மோசமானதில் இருந்து நிறுத்தி விட்டேன் , மறுபடியும் ஓடாததிற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதை சொல்லி நிறுத்தாமல் , மீண்டும் ஓட வேண்டும் .
நாளை முதல் மீண்டும் ஓட்டம் தினமும் எழுத்து இரண்டையும் தொடரவேண்டும் . புத்தகவாசிப்பும் குறைவாகவே செய்கிறேன் , அதையும் அதிகப்படுத்த வேண்டும் .
எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் . வாழை படம் பார்க்க ஆவலாக உள்ளேன் OTT ல் வரவும் .
என்னுடைய எழுத்து நடையையும் மாற்றி அமைக்க வேண்டும் .
என் பிறப்பிற்க்கான பயன் என்னவாக இருக்கும் என சில சமயம் யோசிக்கிறேன் , அதி மேதாவி எழுத்தாளர்களை வாசிக்கும் பொழுது , என்னையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் பொது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது இருந்தும் , நம்ம ஒரு ரூட்டில் செல்வோம் என என்னை நானே தேற்றி கொள்கிறேன் , என்னை போல் படைப்பதற்கு நான் மட்டுமே இருக்கிறேன் என எண்ணிக்கொள்கிறேன் . இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் , நிறைய வாசிக்க எழுத வேண்டும் .பார்க்கலாம் செய்வோம் வெல்வோம் .
Comments
Post a Comment