10-09-2024
வெண்முரசு நாவலை இடை நிறுத்தி விட்டு சில புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன் , மருபூமி சிறுகதை தொகுப்பு முடித்துவிட்டு " சிவா முழுத்தொகுதி " மூன்று பாகங்கள் கொண்ட புத்தகங்களை கையில் எடுத்தேன் .
சிவன் மீது உள்ள ஆர்வத்தினால் அவரைப் பற்றி முழுமையாக படிக்க ஆசை பட்டேன்.
பிப்ரவரி 29 -ல் வாசிக்க தொடங்கினேன் மெலுகாவின் அமரர்கள் என்ற முதல் பாகத்தை , இன்று தான் மூன்று புத்தகங்களையும் முடித்து இருக்கிறேன் , 7 மாதங்கள் ஆகியுள்ளது , காரணங்கள் பல ,நேரமின்மை தான் முதல் காரணம். இந்த புத்தகத்தை ஏன் தேர்வு செய்தோமோ என மிக வருந்தினேன் , உலகம் முழுவதும் பிரபலமான புத்தகம் 3.5 லட்சம் பிரதிகள் விற்ற புத்தகம் , என் மனதுக்கு புடிக்கவில்லை என்றாலும் நிறைய புதியவனவற்றை கற்றுக்கொண்டேன் .
இதில் உள்ள பல முரணான தகவல்கள் ரசிக்கும் படியாக இருந்தது . சதிக்கு சிவன் இரண்டாவது கணவர் , விநாயகர் யார் , முருகனின் செயல்கள் , இப்புத்தகங்களில் வரும் இடங்கள் , அனைத்தும் எனக்கு புதிய தகவல்கள் .
இப்புத்தகத்தை தொடர் கதையாக எடுக்கலாம் , ஏகப்பட்ட எதிர்பாரா திருப்பங்கள் , சாகசங்கள் , நம்மை சோர்வடையாமல் கதையை நகர்த்தி செல்கிறது .
இறுதியில் சிவன் இமயமலையில் இருப்பது , சதி தேவிக்கு வடக்கே இன்றும் உள்ள கோவில்களின் தோற்றம் , விநாயகரின் குணநலன்கள் , போர்க்கடவுளான முருகனை , அவர் தமிழகத்திற்கு வந்ததை பற்றியும் , சில வரிகளில் 'அமீஷ் திரிபாதி ' கூறியது ஓரளவு நிறைவு அளித்தது எனக்கு .
எதிர் பாராத சில நல்ல தத்துவங்களும் ஆங்காங்கே இருந்தது , இனி அமீஷ் திரிபாதியின் வேறு நூல்களை நான் வாசிக்க போவதில்லை . இப்புத்தகத்தை எப்படியோ படித்து முடித்து விட்டேன் என்ற சந்தோஷம் உள்ளது .
நான் படிக்காமல் பாதியில் விட்ட ஒரே புத்தகம் டால்ஸ்டாய் -ன் " போறும் அமைதியும் " நாவல் மட்டுமே அந்த வரிசையில் இது சேர்ந்து விடுமோ என பயந்தேன் நல்லவேளை முடித்து விட்டேன் , ஏனெனில் அந்த புத்தகம் என்னை விடாமல் துரத்துகிறது அவ்வப்போது கனவுகளில் மீண்டும் அதை முடிக்க வேண்டும் என்றாவது ஒருநாள் .
இப்புத்தகம் என் மனதுக்கு நெருக்கமாக இல்லாவிட்டாலும் , இதில் பல காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது , ஏப்ரல் 5 ல் வாசித்துக்கொண்டிருந்தபோது திடீரென சிவனின் பெயர் " நீல கண்டன் " என மாறியது எனக்கு தூக்கிவாரி போட்டது , ஏனெனில் அந்த பெயரை முன்பே நான் தேர்வு செய்தேன் என் மகனுக்கு " பொன் நீலன் " .
நிறைய காட்சிகள் நினைவுகளில் தங்கும் படியாக இருந்தது, நட்பு, காதல், துரோகம், அன்பு, பாசம், மகன் உயிரோடு இருப்பதை அறியாத தாய்.
நம் வாழ்வில் மிக தீயவர்களாக நினைப்பவர்கள் கூட மிக நல்லவர்களாக இருக்க வாய்ப்புண்டு என நம்பவைத்தது சில சம்பவங்கள் இதில்.
இந்த மூன்று புத்தகங்களும் தமிழிலேயே எழுதப் பட்டிருந்தால் மனதுக்கு ஒட்டியிருக்குமோ என்னவோ, மொழிபெயர்ப்பு நூல் என்பது சில இடங்களில் தெரிந்தது.
இப்போது உள்ள சொற்களை அப்படியே பயன் படுத்தியது பிடிக்கவில்லை,.
ராமனின் பிற்கால ஆட்சி பற்றி கொஞ்சம் அறிய முடிந்தது.
பரிணாம வளர்ச்சியில் விவசாயத்தை குறை சொல்லும் ஒரு சமூகம் உள்ளது எனவும் அதை வாசிக்கும் பொழுது நம்மால் ஏற்கவும் முடிகிறது என்பதை " ஓநாய் குலசின்னம் " நாவலில் அனுபவித்தேன்.
அதே போல் இதில் மூச்சுவிடுவதில் உள்ள உலகமயமாதல் பற்றி வாசிக்கயில் பிராமிப்பாக இருந்தது.
தன்னை புனிதமானவர்கள் என நம்பும் சில சமூகம் உண்மையில் எவ்வளவு கீழ்மையானவர்கள் என உணர வைக்கிறது சில சம்பவங்கள்.
நிறைய கூறலாம் இப்புத்தகத்தை பற்றி விருப்பம் உள்ளவர்கள் வாசித்து அனுபவியுங்கள்.
அமீஸ் தெரிபாதிக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும், பல புதிய சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறார்.

Comments
Post a Comment