11-09-2024
வியாபார யுத்திகள் எவ்வளவு காலம் ஆனாலும் கற்றுக்கொண்டே இருக்க நேறும் போல.
இன்று விஜய் சேதுபதியின் " இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " படம் பார்த்தேன், நீண்ட நாட்கள் ஆகிவிட்டது வயிறு வலிக்க சிரித்து.
தீடீரென இந்தப் படம் பார்க்க தோன்றியது, முன்பு எப்போதோ பார்த்தது, இன்று பார்க்கும் பொழுது சில விடயங்களை கண்டேன்.
விஜய் சேதுபதியின் பல படங்கள் என் மனதில் நீங்கா இடம் பெற்றவை,
காதலும் கடந்து போகும், 96, தென்மேற்கு பருவகாற்று, மாமனிதன், தர்மதுரை, கடைசி விவசாயீ, இறைவி, ஆண்டவன் கட்டளை, ஆரஞ்சு மிட்டாய்,என இவரின் பல படங்கள் பொழுது போக்கையும் தாண்டி நம்மை ஏதோ செய்கிறது.
இயல்பான நடிப்பை விட ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்கிறார்.
சினிமா உள்ளவரை நினைக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்.
நன்றி சேது.
இன்று உடல் கலைப்போடு ஒரு வேலை செய்ய துடங்கினேன் இறுதியில் சுறுப்பு சுறுப்பு அடைந்தேன்.
நாம் செய்யும் வேலை பிறரை பாதிக்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Comments
Post a Comment