14-09-2024
ஒவ்வொரு புதிய செய்கையும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பதை மனதார உணர்ந்தேன் . கனிவான பேச்சும் சாந்தமான பார்வையும் எளியமனிதர்களை இனிமையாக ஏற்றுக்கொள்ள வைக்கும் .
வெயில் விருப்பமான ஒன்று எனக்கு , அனால் சில காலமாக என் கண்களால் அதை எதிர்கொள்ள இயலவில்லை , காரணம் மின்திரைகளாக இருக்கலாம் .
இன்று 'GOAT' படத்திற்கு சென்றேன் , வெங்கட்பிரபு வின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது . நடிகர் விஜய் சினிமாவை விட்டு செல்ல போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இவ்வளவு கூட்டம் இனி எந்த நடிகருக்கு வாய்க்கப்போகிறதோ .
மாற்றுத்திறனாளிகள் , வயது முதிர்வு அடைந்தவர்கள் , குழந்தைகள் , பெண்கள் , என அனைத்து வகை மக்களையும் ஈர்க்கும் திறன் என்னை அதிசயிக்க வைக்கிறது .
50 வயதில் இவ்வளவு துடிப்போடும் ஆர்வத்தோடும் தன் கலையை மிக நேர்த்தியாகவும் மெனக்கெடலுடனும் வேலை பார்ப்பது அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது ,
இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 68 படங்கள் , அவரின் நிலைத்தன்மையை மற்றும் ஒழுக்கத்தை காட்டுகிறது .
நான் திரையரங்கிற்கு சென்ற முதல் விஜய் படம் என்பதாலோ என்னவோ மிக ஆச்சரியம் இவ்வளவு கூட்டம் பார்த்து .
இப்படி ஒரு ஆளுமை தன் களத்தை விட்டு வெளியேறுவது என்பது நினைக்க கூட முடியவில்லை , 200 கோடி சம்பளத்தை உதறி விட்டு பொது வாழ்வில் ஈடுபடப்போவது வியக்க வைக்கிறது .
பள்ளியில் விஜய் ரசிகர்களிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன் , " ஓவரா உங்க தலைவர் மாதிரியே சீன் போடுறீங்க டா , நடிக்காம நீங்க நீங்களா நடந்துக்கோங்கடா னு " . விஜய் ரசிகர்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம் அப்போது . சசி , சிவராஜ் , ஹரி , மோகன் , இன்னமும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் .சிரிப்பு வருகிறது அதை நினைத்து .
திரையரங்கில் இவ்வளவு கூட்டத்தை பார்த்த பின்பு எனக்கும் நம்பிக்கை வந்து விட்டது , அரசியலில் பெருவாரியான வாக்குகள் கண்டிப்பாக பெறுவார் .
வாழ்த்து கூறுவதை தவிர வேறு வழியில்லை .


Comments
Post a Comment