20-09-2024
நேற்று மதுரையில் நடந்த நிகழ்வுகள் வாழ்வு முழுவதும் நினைவில் நீங்காதவை, இறுதியில் நிம்மதி அளிக்க கூடியதாக நிறைவு பெற்றது.
மனம் களிப்பில் திலைத்தது, கண்களில் நீர் ததும்ப அனைவருக்கும் தெரிவித்தேன் கைபேசியில், 'நீலனுக்கு ஒன்னுமே இல்ல எல்லாம் normal னு டாக்டர் சொல்லிட்டாரு ' னு.
அனைவரது குரலிலும் நிம்மதி கலந்த உணர்வோடு வார்த்தைகள் மெதுவாக வருவதை ரசித்தேன், அவர்களது கண்களிலும் நீர் கோர்த்திருக்கும்.
நீலனுக்கு கிட்னியில் ஒரு பிரச்சனையும் இருக்காது னு ஆழ்மனம் நம்பினாலும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகிவிட்ட பின்பே மனம் அமைதி அடைந்தது,.
நன்றி திரு கோபாலன் மருத்துவர்.
நன்றி கணேஷ் மாமா.
அவன் பிறந்த போது அடைந்த சந்தோஷம் மீண்டும் கண்டேன்.
அவன் மகிழ்வானவன்,.. என் மகன். அவன் அவனாக இருக்க வேண்டும், என்னை போல் என் தந்தைஐ போல் ஒரு சுயம்புவாக தன் சிந்தனையில் இருந்து.

Comments
Post a Comment