23-09-2024
'மெய்யழகன்' படம் பார்க்க ஆவலாக உள்ளேன். இன்று வியாபாரம் அமைதியாக சென்றது.
ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன். 'சபரீஸ்குமார்' என்பவரின் கட்டுரை என்னை மிகவும் பொறாமை கொள்ள வைத்தது, நாமும் இதே போல் எழுத வேண்டும் என்று.
எனக்கு பல நேரங்களில் தோன்றுவதுண்டு சில நல்ல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வாசிக்கும் போது, நாம் ஏன் எழுத வேண்டும் இவ்வளவு சிறப்பாக இத்துணை நபர்கள் எழுதும் போது.
எழுத்தாளர் "எஸ். ரா " ஒன்று சொன்னார் ' என்னைவிட சிறப்பாக எழுதவும் கொஞ்சம் குறைவாக எழுதவும் ஆட்கள் இருக்கலாம் நிறைய, ஆனால் என்னை போல் எழுத நான் மட்டுமே இருக்கிறேன்' என, அந்த வரிதான் என்னையும் எழுத வைக்கிறது.
தினமும் ஒருமணி நேரம் எழுத ஆசைப்படுகிறேன் ஆனால் சரியான சூழல் அமைக்க வேண்டும் நான் .
சபரி, விசாக், இருவரிடமும் பேசினேன், மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
இருவரும் வெளிநாட்டில் உள்ளனர், அக்டோபர் மாதம் வருகின்றனர்.
இன்று இரண்டு மலையாளபடங்கள் பார்த்தேன்,

Comments
Post a Comment