27-09-2024
காலையில் கைபேசி என்னை எழுப்ப தவறிவிட்டது, என அதன் மீது பழி சுமத்தி 5.50 க்கு எழுந்தேன்.
கடையில் சில வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது மிக கடினமான ஒன்று மனதளவில்.
இன்று ஒரு கடையில் தெரியாமல் ஒரு பொருளுக்கு அதிகத்தொகை வாங்கிவிட்டேன். அடுத்த முறை அந்த கடையில் என்ன ஆகுமோ என பயம்.
மழை நன்றாக பெய்தது, மழையில் நனைந்து கொண்டே நீலனுக்கு ஊசி போட சென்றோம் நானும் அம்மாவும்.
இன்று ஒரு வியாபாரி அதிகமுறை கைபேசியில் அழைத்தார் பணத்துக்காக.
நாளை முதல் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
Comments
Post a Comment