28-09-2024

                   ஒரு கிளை வெட்டப்பட்ட வெப்பமரம் அதன் மேல் பகுதியை அதன் காலடியில் இருந்து காண இயலாது ஏன் எனில் மரத்தின் 10 அடி உயரத்தில் தொழுவம் அமைக்க பட்டு ஒரு டீ கடையும் உண்டு, அந்த தேநீர் கடைக்கு 3 வருடங்களாக சென்று வருகிறேன் வியாபாரம் பார்க்க,.

        முதல் முறை நான் அதை காணும் போது ஒரு கை வெட்டப்பட்ட மனிதன் போல தோன்றியது.


மரத்தின் கிளை வெட்டபட்ட பகுதி நீண்ட வருடங்கள் அதை மூடுவதற்காக ஒரு வகை பிசினை உருவாக்கும், நமக்கு புண்களில் பக்கு ஏற்படுவதை போல.


நான் அந்த மரத்தை பார்க்கும் போதெல்லாம் தடவி கொடுப்பேன், தொடுகையில் ஆறுதலையும் அன்பையும் கடத்துவேன்.

அதன் கட்டி இரத்தம் ஆகிய பிசினை என் விரலில் தடவி பார்ப்பேன், என் தோல் மீது இன்னொரு தோல் வளர்ந்தது போல் இருக்கும்.அதை பயன் படுத்தி வளையம் போட்டால் விரல் க்கு எளிதாக இருக்கும்.


இன்று வியாபாரதிற்கு சென்ற போது அந்த வெப்ப மரம் முழுமையாக வெட்ட பட்டு இருந்தது, மனம் கனத்தது. 

   இடுப்புக்கு மேலே உடல் இல்லாத மனிதன் போலே இருந்தது அந்த இடம், வெக்கை அதிகமாக இருந்தது.

        அந்த கடையை கடந்து செல்லும் போது, ஏதோ தூரத்து நண்பர் இன்னும் வெகு தூரம் சென்று விட்டது போல் உணர்ந்தேன், அந்த நண்பரின் முகம் காண இன்னும் எத்துணை ஆண்டுகள் ஆகுமோ.

       அதன் புகைப்படம் இல்லாதது வருத்தம்.

         வியாபாரதிற்கு சென்று வந்து நீண்ட நேரம் குளித்தேன்.

       நேற்று இரவு நீலன் திடீரென சத்தம் போட்டு அழுதான், அனைவரும் பயந்துவிட்டோம்.

      காலை 3.30 க்கு மேல் உறங்கினோம்.

       இன்று பெரியப்பாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தோம்,. அவர் பழைய நிலைமைக்கு திரும்ப வரவேண்டும்.

       கால் ஓடிந்த மதவேழத்தை பார்ப்பது போல் துயரமாக உள்ளது அவரை காணும்போது.

      வீட்டீற்கு வரவும் மிக புத்துணர்ச்சியாக உள்ளார்.

        இயற்க்கையை வேண்டுகிறேன் மீண்டு வரவேண்டும்.


   என் அண்ணன் வருத்தம் படுவதை என்னால் காணவே இயலவில்லை, மனம் நோகுகிறது.

       என் நம்பிக்கையையும் தைரியத்தையும் வார்த்தைகளில் அவனிடம் கூற எனக்கு தெரியவில்லை.

நடப்பதெல்லாம் நன்மைக்கே. நினைப்பது தான் நடக்கும், எல்லாமே மனசு தான்.





 


Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025