6-09-2024
ஒருவர் தன்னை மாற்றுத்திறனாலி என முன்வைக்கும் கட்டாயத்தின் வலியை அறிந்தேன்.
வாழ்வின் உன்னதமான நினைவுகளையும் நிகழ்வுகளையும் புறம் தள்ளிவிட்டு, மிகச்சிறுமையானவற்றை முதன்மை எனக்கொள்ளும் மனிதரைப் பார்த்து புன்னகை புரிந்தேன், அவரிடம் சில தத்துவங்களையும் பொழிந்தேன், வார்த்தையை விரயம் செய்து விட்டேன் என இப்போது தோன்றுகிறது.
சில நாட்களாக அதிக உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் அசதி அதிகமாக உள்ளது.
இன்று தொடர்ச்சியாக 100 பக்கங்களுக்கு மேல் படித்தேன் சூரியவெளிச்சத்தில்.
அரை மணிநேரம் உறங்கியது மிக புத்துணர்வாக இருந்தது.
தீவிரமான வெயிலின் தாக்கதோடு சற்று குழுமையான புங்கை மர நிழலில் நின்று பூபதிராஜாவிடம் தொலைபேசியில் பேசினேன் சிறிது நேரம் மகிழ்வாக இருந்தது.

Comments
Post a Comment