8-09-2024

 இன்று ஏனோ மனநிலை கொஞ்சம் காரணம் இல்லாத சோகத்தில் இருந்தது.

ஒரு சுபநிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வந்தேன், என் மீது எனக்கே கோபம்.

இனிமேலாவது யோசித்து செயல்பட வேண்டும்.

' 5 centimeters per second ' என்ற அனிமே படம் பார்த்தேன், மூன்று விதமான கதை, மூன்றுமே மூச்சை அடைத்தது. மகட்டோ சிங்காய் மீது பற்று அதிகம் ஏற்பட்டது.


 அனிமே உலகத்தில் வாழ தீராத ஆசையும் மோகமும் ஏற்பட்டுள்ளது.

வயதும் நமக்கு ஏற்படும் அன்றாட பிரச்சனைகளும் நமது சூழலும், கலையையும் இயற்கையையும் முழு மனதார ரசிக்க விடுவதில்லை ஆனால் ஒரு நொடியில் அனைத்தையும் மறந்து வெற்று யோசனையில் உள் நுழைய வேண்டும், அப்படி பழக திடமான மனதும் கிறுக்குத்தனமும் வேண்டும்.


நேற்று இரவு 100 பக்கம் படித்தேன்.

ஆன்மிகச் சிந்தனை எனக்குள் முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதோ என தோன்றுகிறது.


Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025