9-09-2024
மெய்யழகன் என்ற படத்தில் இருந்து கமலின் குரலில் ' யாரோ இவன் யாரோ' என்ற பாடலை காலை முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு 200 பக்கங்களுக்கு மேல் படித்துள்ளேன் இன்று, மனம் மிக மெல்லிசாகவும் அமைதியாகவும் உள்ளது.
இப்பொழுது கிடைக்கும் வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமான சன்மானம் கிடைக்கும் வேலைக்கு செல்லவா என கேட்ட போது,
' வேண்டாங்க அதெல்லாம் நீங்க இப்டியே இருங்க இதான் நம்ம எல்லாருக்கும் சந்தோஷம் ' எனக்கூறும் மனைவியும், "அதெல்லாம் நிம்மதி குடுக்காது பா இருக்குறத வச்சு நல்லா வாழ்வோம் " எனக் கூறும் தாய் தந்தையும் கிடைக்க நான் செய்த புண்ணியம் என்னவோ.
நீலனை பார்த்து பரவசம் கொள்கிறேன் மகிழ்ச்சி அடைகிறேன், அவன் மகிழ்வானவன், எப்பொழுதும் அவன் முகத்தில் சிரிப்பு.
இன்று பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்கிவிட்டேன்.
நன்றாக சாப்பிட்டேன், பருப்பு குழம்பு வெங்காயம் முட்டை சுவையாக இருந்தது.
சில மனிதர்களின் அர்த்தமற்ற வார்த்தைகள், ஒன்றும் அறியாத மனதில் ஏற்படுத்தும் வலியும் அழுகையும் கண்டேன் நேற்று, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சமாதான சொற்கள் கூறினேன்.

Comments
Post a Comment